இந்தியாவில் நடந்த பகீர் சம்பவம் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று டோஸ் – பெண் பரப்பு குற்றச்சாட்டு!!!

0
இந்தியாவில் நடந்த பகீர் சம்பவம் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று டோஸ் - பெண் பரப்பு குற்றச்சாட்டு!!!
இந்தியாவில் நடந்த பகீர் சம்பவம் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று டோஸ் - பெண் பரப்பு குற்றச்சாட்டு!!!

உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக பல்வேறு உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும் நாள்தோறும் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க ஒரு வழி தடுப்பூசி தான் என அறிஞர்கள் கூறிவருகின்றனர்.

பெண்ணுக்கு ஒரே நாளில் மூன்று டோஸ் தடுப்பூசி…

முதலில் தடுப்பூசி போடுவதில் மிகுந்த தயக்கம் காட்டிய மக்கள் தற்போது மிக ஆர்வமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர். இதுவரை உலகத்திலே இந்தியாவில் தான் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறிகின்றன.இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒரு பெண், கடந்த 25-ம் தேதி அருகில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு சென்றார். அப்போது தனக்கு அடுத்தடுத்து மூன்று டோஸ் போடப்பட்டதாக அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார்.அந்த பெண்ணின் கணவர் வைபவ், முதல் டோஸுக்குப் பிறகு யாரும் தனது மனைவியை எழுந்திருக்கச் சொல்லவில்லை.

பெண்ணுக்கு ஒரே நாளில் மூன்று டோஸ் தடுப்பூசி...
பெண்ணுக்கு ஒரே நாளில் மூன்று டோஸ் தடுப்பூசி…

எனவே அவர் தொடர்ந்து மூன்று முறை தடுப்பூசி போடப்பட்டதாக கூறினார். மனைவிக்கு மாலையில் காய்ச்சல் வந்தது. குடும்ப மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்து எடுத்துக் கொண்டார்’ என்று கூறியுள்ளார்.இதனை தொடர்ந்து அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர் கூறுகையில், அந்த பெண்ணை இரண்டு முறை கவனமாக பரிசோதித்தோம். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை கண்டுபிடித்தோம். அவருக்கு இரத்த அழுத்தம் மற்றும் துடிப்பு வீதமும் சாதாரணமாக இருந்தது.இந்த சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவ துறை அதிகாரிகள் தீவிரமாக தடுப்பூசி மையத்தில் உள்ள செவிலியர்களிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் விசாரணைக்கு ஒரு குழுவை அமைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here