இந்தியன் 2 படம் இயக்குனர் ஷங்கர் லைகா பிரச்சனை – தீர்த்துவைக்க மத்தியஸ்தர் நியமனம்!!!

0
இந்தியன் 2 படம் இயக்குனர் ஷங்கர் லைகா பிரச்சனை - தீர்த்துவைக்க மத்தியஸ்தர் நியமனம்!!!
இந்தியன் 2 படம் இயக்குனர் ஷங்கர் லைகா பிரச்சனை - தீர்த்துவைக்க மத்தியஸ்தர் நியமனம்!!!

இயக்குனர் ஷஃங்கருக்கும் பிரபல பட தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.இந்தியன் 2 படத்தினால் பல நாட்களாக இருந்து வருகிறது. சென்னை உச்சநீதிமன்றத்தில் லைகா நிறுவனம் ஷங்கர் மீது வழக்கு கொடுத்ததை தொடர்ந்து இன்று விசாரணைக்கு வந்த வழக்கிக் இந்த பிரச்சனையை தீர்த்துவைக்க மத்தியஸ்தர் ஒருவரை நியமனம் செய்யப்பட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

ஷங்கர் லைகா பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தர்…

கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2 இந்த படத்தின் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை கடந்த ஆண்டுக்கு முன்னே படப்பிடிப்பின் பணிகளை தொடங்கிவிட்டனர். பின் நடிகர் கமலுக்கு தோல் அலர்ஜி ஏற்பட்டதால் சில நாட்கள் படப்பிடிப்பு நித்தப்பட்டது, அதன்பின் மீண்டும் தொடங்கிய சில நாட்களில் படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது அதில் பட குழுவினர் சிலருக்கு காயம் ஏற்பட்டது, அதனால் படப்பிடிப்பை நிறுத்தியது. அதன் பின் கொரோனா ஊரடங்கு காரணத்தால் படபிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்பொழுது இந்தியன் 2 படபிடிப்பை தொடங்காமல் வேறு ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்து அந்த படப்பிடிப்பின் வேலைகளை தொடங்கிய ஷங்கர் மீது லைகா நிறுவனம் சென்னை உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.

ஷங்கர் லைகா பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தர்...
ஷங்கர் லைகா பிரச்சனையை தீர்க்க மத்தியஸ்தர்…

பின் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை செய்தது. அதில் ஷங்கர் எனக்கு சம்பளமாக பேசிய 40 கோடியில் 16 கோடி மட்டுமே கொடுத்தனர் மீதமுள்ள பணத்தை கொடுக்கவில்லை என்று கூறினார்.அதன் பின் இரு தரப்பினரு பேசி முடிவு எடுக்குமாறு உத்தரவிட்டது. பின் அந்த பேச்சுவார்த்தையில் சமரசத்துக்கு வரவில்லை எனவே இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கு விசாரித்த நீதிபதி முடிவுக்கு வராத இந்த வழக்கை தீர்த்துவைக்க மத்தியஸ்தர் ஒருவரை ஷங்கர் மற்றும் லைகா நிறுவனதத்திர்க்கும் உள்ள பிரச்சனையை பேசி முடிவு எடுத்து கூறுவார் அவர் கூறுவதை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவருமாறு சென்னை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பானுமதி என்பவரைதான் மத்தியஸ்தராக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here