தக்காளி இல்லாமல் சுவையான காஷ்மீரி மட்டன் யாக்னி ரெசிபி., இந்த சண்டே உங்க வீட்ல செஞ்சு பாருங்க., சுவை அள்ளும்!!

0
தக்காளி இல்லாமல் சுவையான காஷ்மீரி மட்டன் யாக்னி ரெசிபி., இந்த சண்டே உங்க வீட்ல செஞ்சு பாருங்க., சுவை அள்ளும்!!
தக்காளி இல்லாமல் சுவையான காஷ்மீரி மட்டன் யாக்னி ரெசிபி., இந்த சண்டே உங்க வீட்ல செஞ்சு பாருங்க., சுவை அள்ளும்!!

பொதுவாக நம் வீடுகளில் மட்டன் என்றாலே அதை குழம்பு அல்லது கிரேவி போன்ற ரெசிபிகளை சமைத்து இருப்போம். மேலும் இந்த ரெசிபிகளை சமைக்க முக்கியமான ஒரு பொருள் தக்காளி. ஆனால் தற்போது தக்காளி இல்லாமல் ஒரு சுவையான ரெசிபி சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தேவையான பொருட்கள்;

  • மட்டன் – 1/2 கிலோ
  • தயிர் – 1/4 கிலோ
  • பட்டை – 2
  • கிராம்பு – 4
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்
  • பிரியாணி இலை – 1
  • பெருங்காயத்தூள் – 1 டீஸ்பூன்
  • இஞ்சி நறுக்கியது – 1 டீஸ்பூன்
  • வெள்ளை பூண்டு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த காஷ்மீரி மட்டன் யாக்னி சமைப்பதற்கு ஒரு குக்கரில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்து கொள்ளவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, மிளகு, வெள்ளை பூண்டு நறுக்கியது, பெருங்காயத்தூள், இஞ்சி நறுக்கியது, ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடவும். பிறகு அதை ஒரு 5 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

பின் மட்டனை மட்டுமே அதில் இருந்து பிரித்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்போது ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து 3 டீஸ்பூன் நெய் ஊற்றி அதில் சீரகத்தை போட்டு கொள்ளவும். இதோடு அதில் 1/ 4 கிலோ தயிர் ஊற்றி, வேக வைத்துள்ள தயிரை அதில் போட்டு கொள்ளவும் . பின்னர் அதில் மட்டனை வேக வைத்து தண்ணீரை அதில் ஊற்றி கொள்ளவும். மேலும் அதில் 1 டீஸ்பூன் மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும் 20 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். இப்போது நமக்கு சுவையான காஷ்மீரி மட்டன் யாக்னி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here