டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல இந்திய அணி இதை தான் செய்ய வேண்டும்…, இங்கிலாந்து கேப்டன் ஓபன் டாக்!!

0
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல இந்திய அணி இதை தான் செய்ய வேண்டும்..., இங்கிலாந்து கேப்டன் ஓபன் டாக்!!
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல இந்திய அணி இதை தான் செய்ய வேண்டும்..., இங்கிலாந்து கேப்டன் ஓபன் டாக்!!

ஐசிசி சார்பாக சுழற்சி முறையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இதுவரை நடந்து முடிந்த 2 சீசன்களிலும் இந்திய அணி இறுதி போட்டி வரை முன்னேறி கோப்பையை வெல்ல தவறியது. இதற்கிடையில், கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான 3வது சீசன் தொடங்கியது. இந்த சீசனில் இந்திய அணி உலக கோப்பைக்கான பாதையை தேர்வு செய்ய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் சில ஐடியாக்களை அளித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, இந்திய அணிக்கு இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன், மிட்செல் மார்ஷ் போன்ற ஆல் ரவுண்டர்கள் தேவை. இவர்கள் தான், 6 வது அல்லது 7 வது பேட்ஸ்மேனாக களமிறங்கி ஸ்கோரை உயர்த்துவதுடன் விக்கெட்டை எடுப்பதிலும் வல்லவர்களாக திகழ்வார்கள். இந்திய அணி தனது சொந்த மண்ணில் சிறந்து விளங்கினாலும், அந்நிய மண்ணில் குறிப்பாக டெஸ்ட் வடிவிலான போட்டிகளில் தடுமாற்றமே அடைந்து வருகிறது. அக்சர் படேல், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய 3 ஆல் ரவுண்டர்கள் சொந்த மண்ணில் ஜொலிக்க தவறியதே இல்லை என குறிப்பிட்டு நாசர் உசேன் கூறியுள்ளார்.

IND vs WI T20: தொடரை காப்பாற்ற இந்திய அணிக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு…, வெஸ்ட் இண்டீஸ் இதற்கு வழி வகுக்குமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here