டெங்கு காய்ச்சலுக்கு வலி மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா? மருத்துவர்கள் முக்கிய ஆலோசனை!!
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் வேகமெடுத்து வருகிறது. இதனால் மத்திய & மாநில அரசுகள் டெங்கு கொசு ஒழிப்புக்கான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அப்படி டெங்கு காய்ச்சல் வந்த பிறகு அதிலிருந்து மீள்பவர்களுக்கு உடலில் அதிகப்படியான வலி ஏற்படுமாம். இதனால் அவர்கள் வலி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு வலி மாத்திரைகளை சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனை, வாய்வுத் தொல்லை, வயிற்றுப் புண், உள்ளிட்ட வேறு நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் அசதி மற்றும் உடல் வலியை போக்குவதற்கு பாரசிட்டமால் மாத்திரையை எடுத்து கொள்வது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.