‘சுகர் Patients வாய்க்கு ருசியா சாப்பிடலாம்’ – ஆரோக்கியமான “லேயர் கோதுமை பரோட்டா” ரெசிபி!!

0

சுகர் வந்துட்டாலே எல்லாரும் அத சாப்பிடாதீங்க, இத சாப்பிடாதீங்கனு சொல்லுவாங்க. கோதுமைல செய்ற உணவு அதிகமா எடுத்துக்கோங்கன்னு டாக்டர் சொல்லுவாரு . கோதுமைல ஒரே மாதிரி சப்பாத்தி செஞ்சு சாப்பிட்டு போர் அடிக்குதா?? கவலைய விடுங்க!! சுவையான, ஆரோக்கியமான ” கோதுமை லேயர் பரோட்டா” செஞ்சு சாப்பிடுங்க, டேஸ்ட்டும் செம்மையா இருக்கும், சுகரும் கன்ட்ரோலா இருக்கும். “ஆரோக்கியமான, ரொம்ப சாஃப்டான லேயர் கோதுமை பரோட்டா ” எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு -1/2 kg

முட்டை -2

எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

சர்க்கரை -2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் கோதுமை மாவு, உப்பு மற்றும் சர்க்கரையை எடுத்து கலந்து விட்டுக் கொள்ள வேண்டும். பிறகு, அதில் முட்டை, எண்ணெய் மற்றும் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும். மாவு கையில் ஒட்டாத அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் மாவை மூடி வைத்து ஊற விட வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

20 நிமிடங்கள் கழித்து மாவை எடுத்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின்னர் ஒரு உருண்டையை எடுத்து மிகவும் லேசாக தேய்த்துக் கொள்ள வேண்டும். ஒரு முனையில் இருந்து மறு முனை வரை விசிறி போல் மடக்கி அதனை எடுத்து வட்டமாக மடக்கிக் கொள்ள வேண்டும். பிறகு, எப்போதும் போல் வட்டமாக தேய்த்து பரோட்டாவை கல்லில் சுட்டு எடுக்கவும்.

பிக் பாஸில் என்ட்ரி கொடுக்கும் VJ மகேஸ்வரி!!

சூடாக இருக்கும் போதே பரோட்டாவை நன்றாக எல்லா பக்கத்தில் இருந்தும் அடித்து விட வேண்டும். இப்போது சூப்பரான டேஸ்ட்ல், ஆரோக்கியமான “லேயர் கோதுமை பரோட்டா” ரெடி. பரோட்டா கூட சிக்கன் சால்னா வைச்சு சாப்பிட்டு பாருங்க. இனிமேல் கடைல விக்கிற பரோட்டா பக்கமே போக மாட்டிங்க… அவ்ளோ டேஸ்ட்டா, ரொம்ப சாஃப்டா லேயர்,லேயரா இருக்கும். சுகரும் நம்ம கன்ட்ரோல்ல இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here