அரியர் தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் – அண்ணா பல்கலை திட்டவட்டம்!!

0
Anna univ
Anna univ

அரியர் வைத்துள்ள மாணவர்கள் கண்டிப்பாக தேர்வுகளை எழுத வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதே போல் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான தேர்வுகளை எழுத வேண்டிய மாணவர்கள் வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரியர் தேர்வுகள்:

கொரோனா நோய் பரவல் காரணமாக அனைவரும் பாதிக்கப்பட்டாலும், மிகவும் அதிகமான பாதிப்பினை சந்தித்தது மாணவர்கள் தான். தமிழக அரசு மாணவர்களின் உடல் நலன் கருதி தேர்வுகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. அதே போல் கல்லூரிகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கும் தேர்வுகளை ரத்து செய்தது. தமிழக அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

arrear students

நீதிமன்றம் சார்பாக பல்கலைக்கழகங்கள் அரியர் மாணவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடையினை விடுத்துள்ளது. இப்படியான நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்விற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அதிரடியாக அறிவுறுத்தி உள்ளது.

ஆரோக்கியமான “லேயர் கோதுமை பரோட்டா” ரெசிபி!!

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே போல் பொறியியல் படிக்கும் 2020 ஆம் ஆண்டு மாணவர்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் எழுத வேண்டி இருந்தால் தேர்விற்கான கட்டணத்தை வரும் 10 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்புகளால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here