பிக் பாஸில் என்ட்ரி கொடுக்கும் VJ மகேஸ்வரி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் சீசன் 4 இல் அடுத்தடுத்து பல டாஸ்குகளை கொடுத்து போட்டியாளர்களை திணற வைத்துள்ளார் என்றே சொல்லலாம். தற்போது 60 நாட்களை கடந்து விட்ட போதிலும் 13 போட்டியாளர்கள் உள்ளனர். இனி வரும் நாட்களில் எத்தனை பேர் வெளியேறினாலும் இறுதி சுற்றில் 6 பேருக்கு மேற்பட்டவர்கள் தான் இருப்பார்கள். இந்நிலையில் வைல்ட்கார்டு என்ட்ரி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 4

ஜூன் மாதமே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக பல தடங்கல்களை தாண்டி இந்த ஷோ நடைபெற்று வருகிறது. மேலும் ஆடியன்ஸ் யாரும் இல்லாத காரணத்தால் போட்டியாளர்களுக்கு மக்கள் யாருக்கு ஆதரவு அதிகமாக அளித்து வருகின்றனர் என்பது தெரியவில்லை. ஏற்கனவே வைல்ட்கார்டு என்ட்ரியாக அர்ச்சனா உள்ளே நுழைந்தார்.

அர்ச்சனாவுக்கு ஏற்கனவே வெளியில் வரவேற்பு இருந்ததை அடுத்து அவரின் பேச்சும் நடவடிக்கையும் முகம் சுளிக்க தான் வைத்தது. முதல் வாரத்தில் ரேகா வெளியேறினார். இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அடுத்த வாரத்தில் ஆஜித் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் அவரிடம் எவிக்ஷன் பாஸ் இருந்ததால் தப்பித்து விட்டார்.

  ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அடுத்த வாரத்தில் வேல்முருகன் வெளியேறினார். அதற்கு அடுத்த வாரம் தீபாவளி என்பதால் நோ எவிக்ஷன் என்று அறிவிக்கப்பட்டது. சுசித்ரா வேறு வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்தார். ஆக மொத்தம் போட்டியாளர்கள் வெளியேறியதை விட வைல்ட் கார்டு என்ட்ரி அதிகமாக இருந்தது. ஷிவானியுடன் கிசுகிசுக்கப்பட்ட அசிம் கலந்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அவரின் தாயின் உடல் நலக்குறைவால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. இப்பொழுது 60 நாட்களை கடந்த பின்னும் 13 போட்டியாளர்கள் உள்ளனர். இறுதி சுற்றில் எத்தனை பேர் இருப்பார்கள் என்றே சொல்ல முடியவில்லை.

கர்ப்பமான விஷயத்தை குடும்பத்தினரிடம் சொல்வாரா தனம்?? 

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினி மகேஸ்வரி தனது வலைப்பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் ஒரு ஹோட்டல் ரூமில் இருந்து எடுத்தது போல உள்ளது. ஷிவானி, ரம்யா பாண்டியன் போன்றோர் இதே ஹோட்டலில் தான் போட்டிக்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அப்பொழுது 60 நாட்களுக்கு பிறகு மஹேஸ்வரி வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்க போகிறாரா?? என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய் டிவியில் ஏற்கனவே மகேஸ்வரி பல சீரியல்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here