வாட்ஸ் ஆப் நியூ அப்டேட் – இனி கணினியிலும் வீடியோ & ஆடியோ கால் பேசலாம்!!

0

வாட்ஸ் ஆப் வெப் மூலம் கணினியில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்கள் இனி ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்த போவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ்  ஆப்:

இன்றைய காலங்களில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியில் ஒன்று தான் வாட்ஸ் ஆப். இதன் முலம் தனது நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களுக்கு தங்களது தகவலை பரிமாறி வந்தனர். இந்த செயலி சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவர்க்கும் மிகவும் தேவையானா ஒன்று.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முதலில் தகவலை பரிமாறுவதற்கு மற்றும் ஏற்றது போல் இருந்த இந்த செயலி, நாளடைவில் பயனாளர்கள் தங்களுக்கு பிடித்த பாடலை அல்லது புகைப்படங்களை தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு தெரிவது போல் ஸ்டேட்டஸ் வைக்கும் ஆப்ஷனை கொண்டு வந்தது. இந்த ஆப்ஷன் அனைவராலும் கவரப்பட்டது. இதே போல் சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் இருந்து பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்ற புது அப்டேடும் வெளியிட்டது. அதே போல் தற்போது வாட்ஸ் வெப் முலம் கணினியில் பயன்படுத்தும் பயனாளர்களுக்கு புது அப்டேடை அறிவித்துள்ளது.

புது அப்டேட் :

வாட்ஸ் அப் வெப் முலம் கணினியில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இனி ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய வாட்ஸ் ஆப் டெஸ்க்டாப் செயலியின் மூலம் கணினியில் நாம் ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்வதற்கான ஆப்ஷன் ஒன்று இடம் பெற்றிருக்கும். இந்த டெஸ்க்டாப் செயலியை பயன்படுத்துவதற்கு வாட்ஸ் ஆப் மிகவும் அவசியம். தற்போது இது சில பயனாளர்களிடம் மட்டும் அறிமுகப்படுத்தி  இதனை சோதனை செய்து வருகின்றோம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

மீண்டும் குற்றாலத்தில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!

மியூட் ஆப்ஷன்:

மேலும் புதிய அப்டேட் இல் வாட்ஸ் பயனாளர்கள் அனைவரும் இனி தாங்கள் ஸ்டேட்டஸ் போடும் முன்பே அதனை மியூட் செய்யும் ஆப்ஷன் இடம் பெரும் என்று அறிவித்துள்ளார்கள். இதுவரை ஸ்டேட்டஸ் போடும் சாங்கினை ட்ரிம்  செய்யும் ஆப்ஷன் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here