மீண்டும் குற்றாலத்தில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!!

0

குற்றால அருவியில் மீண்டும் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் தேதி குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் கனமழையால் அருவியில் நீர்வரத்து அதிகமாக உள்ள காரணத்தால் அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கம்:

கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக மக்கள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 8 மாதங்களாக தென்காசி மாவட்டத்தில் இருக்கும் குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் கடந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தில் குற்றாலம் அருவியில் கடந்த 15 ஆம் தேதி பொதுமக்கள் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், தற்போது தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் கனமழை பெய்து வருகின்றது. இதனால் குற்றாலத்தின் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதே போல் மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை இரண்டு நாட்களாக பெய்து வருகின்றது. இதனால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அருவியில் குளிப்பதற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சையது முஸ்தாக் அலி லீக் போட்டிகள் – சென்னை , மும்பை உட்பட்ட 6 நகரங்கள் அறிவிப்பு!!

மக்களின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐந்தருவிகளில் நீர்வரத்து குறைவாக உள்ளதால் மக்கள் அங்கு குளிக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here