வெளியே மொறு மொறுனு, உள்ளே ஜூஸியான “சிக்கன் டிக்கா” – செஞ்சு அசத்தலாம் வாங்க!!

0

எப்போதும் சிக்கன் ஒரே மாதிரி சமைக்காம புதுமையா எதாவது சமைக்கலாம்னு நீங்க நெனைச்சிங்கான இந்த சிக்கன் டிக்கா டிஷ்ஷா ஒரு முறை செஞ்சு பாருங்க. உங்க வீட்டில் எதாவது திடீர் பார்ட்டி அல்லது ஃபங்சன் வந்துச்சுன்னா இந்த டிஷ் சமைச்சு பாருங்க. உங்க விருந்தினர் எல்லாம் இந்த டிஷ்ஷ சாப்பிட்டுட்டு உங்கள ரொம்ப புகழ்ந்துட்டு போவாங்க. ரொம்ப டேஸ்ட்டான சிக்கன் டிக்கா எப்படி சமைக்கலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான  பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் – 500 g

தயிர் – 4 டேபிள் ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகுத்தூள் – 2 டீ ஸ்பூன்

சீரகத்தூள் – 1 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் – 2 டீ ஸ்பூன்

கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை சாறு –  2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

வெங்காயம் – 1

குடை மிளகாய் – 1

எண்ணெய்  – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

எலும்பில்லாத சிக்கன் துண்டுகளை வாங்கி, அதை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், குடை மிளகாய், சிக்கன் மூன்றையும் ஒரே அளவில் சதுரமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்பொழுது ஒரு பௌலில், மஞ்சள் தூள், தயிர், மிளகாய் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சை சாறு, கரம் மசாலா, இஞ்சி,பூண்டு பேஸ்ட், போன்றவற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இதில் , வெங்காயம், குடை மிளகாய், சிக்கன் மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து அரை மணி முதல் ஒரு மணி வரை ஊற விட வேண்டும். முடிந்தால் முதல் நாள் இரவில் கலவையை செய்து இரவு முழுவதும் கூட பிரிட்ஜ்ல் வைத்து ஊற விடலாம்.

7 பேருக்கு மறுவாழ்வு அளித்த 2 வயது குழந்தை – மனதை உருக்கிய சம்பவம்!!

மசாலாவில் ஊற வைத்த சிக்கன் கலவையை skewer ல் சிக்கன், வெங்காயம் , குடை மிளகாய் என்ற வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக சொருகி வைக்கவும். இப்பொழுது இந்த குச்சிகளை ஒரு இரும்பு கிரில்  பானில் வரிசையாக வைத்து சிறு தீயில் திருப்பி திருப்பி விட்டு வேக விட வேண்டும்.   எல்லா பக்கங்களும்  வேகும் வரை  இதை செய்ய வேண்டும்.  வேகும் போது மேலே சிறிது எண்ணெய்  ஊற்றி கொள்ள வேண்டும். வெளியில் மொறு மொறுப்பாகும் வரை வைக்க வேண்டும்.

இப்பொழுது சுவையான, “சிக்கன் டிக்கா” ரெடி!! பரிமாறும் போது மேலே சிறிது எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ள வேண்டும். இதனுடன்  புதினா சட்னி சேர்த்து கொடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here