வாட்ஸ் ஆப்பை இனி லாக் அவுட் செய்து கொள்ளலாம் – புதிய அப்டேட்!!

1

தற்போது வாட்ஸ் ஆப் செயலியின் புதிய அப்டேட் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இனி வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தும் பயனாளிகள் இனி தங்களது கணக்கை லாக் அவுட் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளனர்.

வாட்ஸ் ஆப்:

அதிகமான பயனாளர்கள் பயன்படுத்தும் செயலியாக திகழ்கிறது வாட்ஸ் ஆப் செயலி. இந்த செயலி பயனாளர்களின் தேவை கேற்ப பல அம்சங்களை வாட்ஸ் ஆப்பில் அமைத்து வருகிறது. இதனால் இந்த செயலியை பயனாளர்கள் அனைவரும் விரும்பி பயன்படுத்துகின்றனர். மேலும் நிறுவனம் அறிவிக்கும் அம்சங்கள் அனைத்தும் பயனாளர்களை கவரும் வகையில் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இந்த செயலி மூலம் பண பரிவர்த்தனையை கூட மேற்கொள்ளலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த அளவிற்கு பயனாளர்களின் தேவைக்கேற்ப இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும் வாட்ஸ் ஆப் வெப் மூலம் கணினியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தலாம். தற்போது வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதனை WEBeta அறிவித்துள்ளது. அந்த அறிக்கையின் படி இனி பயனாளர்கள் தங்கள் கணக்கை நீக்க முடியாது அதற்கு மாறாக இனி பயனாளர்கள் தங்களது கணக்கை லாக் அவுட் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

‘பெட்ரோல் வாங்க லோன் வேணும்’ – ட்ரெண்ட் ஆகும் பெட்ரோல் விலை கலாய் மீம்ஸ்!!

இந்த அம்சம் அவர்களின் சமூக ஊடக நுகர்வுகளை கண்காணிக்க உதவிகரமாக இருக்கும் என்று கூறுகின்றனர். மேலும் அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் மிக பாதுகாப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த அம்சம் பயனாளர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த ஆப்சனுக்காக தற்போது பயனாளர்கள் காத்து வருகின்றனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here