கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ‘எருமசானி’ ஹரிஜா – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0

‘எருமசானி’ என்ற பிரபல யூடியூப் சேனலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஹரிஜா. 2018ம் ஆண்டு திருமணமான இவர் தற்போது கர்ப்பமாக உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எருமசானி ஹரிஜா

பிரபல தமிழ் யூடியூப் சேனலான ‘எருமசானி’ என்ற சேனலில் நடித்துள்ளவர் ஹரிஜா. சினிமா சார்ந்த கல்லூரி படிப்பை கோயமுத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்துள்ளார் இவர். கல்லூரி படிப்பின் போது இவரும் இவர் நண்பரான விஜய் என்பவரும் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றில் நடித்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சமூகத்தில் நடந்து வரும் நிகழ்வுகளை நகைச்சுவையாக்கி, மக்கள் மத்தியில் எடுத்து செல்லும் இவரது காணொளிகள் மக்கள் மத்தியில் பிரபலமாயின. இவர்கள் இருவரும் நடித்துள்ள single vs committed, boy vs girl, tamil vs english, special shows ஆகியவை மக்கள் மத்தியில் இன்றுவரை பிரபலமாக உள்ளது.

ஒவ்வொரு வீடியோ முடிந்ததும் போடா எருமசானி என்று இவர் கூறும் வார்த்தை மக்கள் மத்தியில் வழக்கத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. எருமசானி யூடியூப் சேனலை விட்டு ஒதுங்கிய ஹரிஜா கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.

‘பெட்ரோல் வாங்க லோன் வேணும்’ – ட்ரெண்ட் ஆகும் பெட்ரோல் விலை கலாய் மீம்ஸ்!!

திருமணத்திற்குப்பின் அவ்வப்போது அவரது புகைப்படங்களை சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பகிர்ந்து வருவார். திருமணத்திற்குப்பின் நடிப்பதை நிறுத்திய ஹரிஜா தற்போது கர்ப்பமாக உள்ளார்.

அவருக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் ஆரஞ்சு நிறப்புடவையில், தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு guess பண்ணுங்க என்று பதிவு ஒன்றை செய்துள்ளார் ஹரிஜா. இந்த புகைப்படத்தைப்பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here