Thursday, May 16, 2024

10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Must Read

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பரவலாக மழை:

தமிழகத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதற்கு வெப்பச்சலனம் மற்றும் கீழடுக்கு சுழற்சியும் ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் செப்.,7 முதல் பயணியர் ரயில் சேவைகள் & மாவட்ட பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி!!

Heavy rain likely in parts of Karnataka this week | Deccan Herald

தற்போது தமிழகத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில், அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கு எங்கு மழை??

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், கரூர், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் மிதமான அல்லது கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

chennai meterological center
chennai meterological center

வெப்பநிலை அனைத்து மாவட்டங்களிலும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் மழை பதிவாகி உள்ளது.

நிலக்கோட்டை பகுதியில் அதிகபட்சமாக 15 செ.மீ மழையும், முண்டியம்பாக்கம் பகுதியில் 11 செ.மீ மழையும், கொள்ளிடம், தாளவாடி பகுதிகளில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக சாத்தூர், அரவக்குறிச்சி பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

செப்டம்பர் 2 ஆம் தேதி முதல் 6 தேதி வரை வங்கக்கடலில் சூறாவளி காற்று 45 – 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -