தமிழகத்தில் செப்.,7 முதல் பேருந்து, பயணியர் ரயில் சேவைகளுக்கு அனுமதி – முதல்வர் உத்தரவு!!

0
Private Bus
Private Bus

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகள் மற்றும் பயணியர் ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார்.

போக்குவரத்திற்கு அனுமதி:

தமிழகத்தில் செப்.,1 முதல் ‘அன்லாக் 4’ தளர்வு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி மாவட்ட எல்லைகளுக்குள் மட்டும் பேருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்படாத காரணத்தால் தனியார் பேருந்துகள் இயங்காது என பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் செப்டம்பர் 7ம் தேதி முதல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மாவட்டம் விட்டு மாவட்டம் இயங்க அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதற்கு தமிழ்நாடு ஆம்னி பஸ்கள் உரிமையாளர்கள் சங்க தலைவர் தர்மராஜ் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

மேலும் செப்டம்பர் 7ம் தேதி முதல் தமிழகத்தில் பயணியர் ரயில் சேவைகளை தொடங்கவும் முதல்வர் அனுமதி வழங்கி உள்ளார். செப்டம்பர் 7ம் தேதி முதல் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவைகளை தொடங்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here