அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0

தென்மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வரும் நாட்களில் தமிழகத்தில் வறண்ட வானிலேயே காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வானிலை:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்கள் மற்றும் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்தில் உள்ள வடமாவட்ட பகுதிகளிலும் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே இருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெகுநாட்களுக்கு பிறகு உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை ஸ்ரேயா – வைரலாகும் புகைப்படம்!!

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வறண்ட வானிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வரும் நாட்களான 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். பெருமளவு காலை நேரம் பனி மூட்டத்துடன் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள விமான நிலைய பகுதியில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஏனைய இடங்களில் மழை பதிவாகவில்லை. தமிழக மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here