பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு – துணைமுதல்வர் பேச்சு!!

0

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் எந்த குற்றமும் செய்த செய்த பேரறிவாளன் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியது அதிமுக அரசு தான் என்று துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கு:

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சிலரால் கொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து அவர் மரணித்ததற்கு காரணமான பலரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் தான் பேரறிவாளன். இவர் சரியாக விசாரிக்கப்படாமல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரது தாய் தனது மகனை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக அரசு மற்றும் நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்து வருகிறார்.

அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இப்படியான நிலையில் அவருக்கு பலரும் ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மற்றும் அவருடன் உள்ள 7 பேரை விடுவிப்பது குறித்து மாநிலத்தின் ஆளுநரே இன்னும் 3 அல்லது 4 நாட்களில் முடிவினை எடுப்பார் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த நிலையில் தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி மேதகு ஆளுநருக்கு பரிந்துரைத்ததும் மாண்புமிகு அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் தான். விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here