சீனாவுடனான மோதலில் இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்ததா..? வெளியுறவுத்துறை விளக்கம்!!

0
Indian Army
Indian Army

சீன ராணுவத்துடன் இந்திய வீரர்கள் மோதிய பொழுது அவர்களிடம் ஆயுதங்கள் இருந்ததா என்பது பற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் விளக்கம் அளித்து உள்ளார்.

எல்லை மோதல்:

இந்தியா – சீனா இடையேயான லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், படைகள் பின்வாங்கும் பொழுது மோதல் ஏற்பட்டது. சீன வீரர்கள் கற்கள் & கட்டைகளை கொண்டு தாக்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்த நிலையில், இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இல்லாமல் ஏன் அனுப்பினீர்கள்? என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Ladakh Border Issue
Ladakh Border Issue

இந்திய ராணுவத்தை தாக்க சீனா பயன்படுத்திய ஆயுதம் – லீக்கான புகைப்படங்கள்..!

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் இது குறித்து விளக்கம் அளித்தார். சீன வீரர்களுடன் மோதலின் பொழுது, நமது ராணுவ வீரர்களிடமும் ஆயுதங்கள் இருந்ததாக கூறியுள்ளார். 1996,2005 ஒப்பந்தங்களின்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தவில்லை. மேலும் மோதலின் பொழுது இந்திய வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என ராணுவம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here