இந்திய ராணுவத்தை தாக்க சீனா பயன்படுத்திய ஆயுதம் – லீக்கான புகைப்படங்கள்..!

0
இந்தியா சீனா தாக்குதல்
இந்தியா சீனா தாக்குதல்

ஒரு மாதத்திற்கு மேலாக இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சனை நடந்து வருகிறது. மேலும் இந்த பிரச்சனையால் நடந்த தாக்குதலால் இந்தியாவை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் சீனா ராணுவம் பயன்படுத்திய அயிதங்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

லடாக் தாக்குதல்

லடாக்கில் உள்ள கல்வான் என்ற பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றது. மேலும் 8 மணி நேரம் தொடர்ந்து நடந்த இந்த சண்டையில் துப்பாக்கிகள், குண்டுகள் எதையும் பயன்படுத்தவில்லை. கம்பிகள், குச்சிகள், எறும்பு ராடுகள் மற்றும் கற்கள் போன்றவை மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

india-china ladaak border
india-china ladaak border

இந்த தாக்குதலை நிகழ்த்துவதற்காக சீன ராணுவம் முழுக்க முழுக்க தயாராகி வந்து இருக்கிறது. அதாவது சீன ராணுவம் முன்பே திட்டமிட்டு தயாராகி லடாக் பகுதிக்கு வந்து இருக்கிறது. இதற்காக வித்தியாசமான ஆயுதங்களை சீனா உருவாக்கி உள்ளது. அதாவது அந்த எல்லைக்கு வந்த 300 சீன வீரர்கள் எல்லோரும் வித்தியாசமான ஆயுதங்களோடு அங்கு வந்து இருக்கிறார்கள்.

ஆயுதங்கள் புகைப்படங்கள்

இந்த நிலையில் இந்திய வீரர்களை தாக்க சீன ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இணையத்தில் வெளியான புகைப்படத்தில் இந்த ஆயுதங்கள் எப்படி இருக்கும் விவரம் வெளியாகி உள்ளது. கட்டிடம் கட்டும் இரும்பு கம்பியில் முற்களை வைத்து வெல்டிங் செய்து இருக்கிறார்கள்.

இந்தியா – சீனா வீடியோ கால் – சமரசத்திற்கு தேதி குறித்த ரஷ்யா..!

ஆயுதங்கள் புகைப்படங்கள்
ஆயுதங்கள் புகைப்படம்

கூரான முற்கள் போல இந்த ஆயுதங்களை உருவாக்கி உள்ளனர். மேலும் ஒரு நாடு பேச்சு வார்த்தைக்கு வரும்போது அயிதங்களை கொண்டு வர வாய்ப்பில்லை. எனவே சீனா தான் திட்டமிட்டு இந்த அயிதங்களை கொண்டு வந்துள்ளது என கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here