அரையாண்டு, காலாண்டு விடைத்தாட்களே இல்லை – எப்படி மார்க் போடுவது..? பள்ளிகள் குழப்பம்..!

0

கொரோனா நோய் தொற்றால் 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது என தமிழக அரசு அறிவித்தது.ஆனால் இப்பொழுது மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பள்ளிகள் தெரிவித்துள்ளன அதற்க்கு காரணம் மாணவர்களின் விடைத்தாள்கள் இல்லயாம்.

ஜூன் 30 வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு – எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு …!

பள்ளிகளில் மாணவர்களின் விடைத்தாள்கள் இல்லை

exam paper
exam paper

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆள் பாஸ் என அறிவிக்கப்பட்டது மேடும் 11ம் வகுப்பிற்கான விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டது.ஆனால் மாணவர்களுக்கு மதிப்பெண் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள்,வருகை பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் வழங்க அரசு அறிவித்தது.இதற்கான பணிகள் நேற்று தொடங்கின மற்றும்  மாணவர்களின் வருகை பதிவேடு, காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலை அனுப்பும்படி பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் காலாண்டு,அரையாண்டு விடைத்தாள்கள் பள்ளிகளில் இல்லை.காலாண்டு மற்றும் அரையாண்டு விடைத்தாள்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது அந்த விடைத்தாள்கள் பெற்றோரிடம் தற்போது இல்லை என்றும் எனவே பள்ளியில் இருக்கும் மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்தது என தகவல் வெளியாகி உள்ளது.

ஆசிரியர்களை நேரில் வர உத்தரவு

exam paper
exam paper

பள்ளி மற்றும் வகுப்பு வாரியாக மாணவர்களின் மதிப்பெண்களை பட்டியலிட வேண்டும்,ஒவ்வொரு பள்ளியிலும், ஆசிரியர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. வரும், 22ம் தேதிக்குள், இந்த பணிகளை முடித்து, பட்டியலை தாக்கல் செய்ய, அரசு தேர்வுகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.அதனால், இந்த உத்தரவை எப்படி நிறைவேற்றுவது என, அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.நிலைமையை சரிக்கட்ட, அவசரமாக புதிய அட்டைகள் அச்சடித்து, அதில் மதிப்பெண்களை பதிவு செய்யும் பணி நடக்கிறது. இதில், பல மாணவர்களுக்கு கூடுதல், குறைவு என, மதிப்பெண் வழங்கவும் வாய்ப்புள்ளதாக, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here