4ஜி விரிவாக்க சேவையில் சீன உபகரணங்கள் வேண்டாம் – BSNL நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

0
BSNL
BSNL

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு சீனாவில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீன உபகரணங்கள் தடை:

இந்திய அரசு முற்றிலும் சுயசார்பான நாடு என்கிற கொள்கையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சீனாவுடன் எல்லையில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அந்நாட்டு தயாரிப்பு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க இந்திய மக்கள் உறுதிகொண்டு உள்ளனர். சீனாவின் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து சீனா மீதான வெறுப்பு அதிகரித்து உள்ளது. இந்நிலையில் BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொழில்நுட்ப பணிகளில் சீன உபகரணங்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்து உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

BSNL
BSNL

இந்தியா – சீனா வீடியோ கால் – சமரசத்திற்கு தேதி குறித்த ரஷ்யா..!

BSNL நிறுவனம் 4ஜி சேவையை வழங்க தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அந்த விரிவாக்க பணிகளுக்காக சீன தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தினால் பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் இதற்காக வழங்கப்பட்ட முந்தைய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் விடப்பட உள்ளது. இதில் சீன நிறுவனங்கள் கலந்து கொள்ளாத வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here