இந்தியா – சீனா வீடியோ கால் – சமரசத்திற்கு தேதி குறித்த ரஷ்யா..!

0
india china
india china

இந்தியா-சீனா இடையே எழுந்திருக்கும் பதற்றமான சூழலில் இரு நாடுகளைக் கட்டுப்பாட்டில் வைக்க ரஷ்யா வீடியோ கான்பரன்சிங் அழைப்பு விடுத்துள்ளது.

வீடியோ கான்பரன்சிங்

அணு ஆயுத பலம் கொண்ட இந்திய-சீன ராணுவம் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் சர்வதேச நாடுகளின் பேசு பொருளாக மாறிவிட்டது. இந்த சூழலில் சண்டை போட்ட இரு நாடுகளைக் கட்டுப்பாட்டில் வைக்க ரஷ்யா வீடியோ கான்பரன்சிங் அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா-சீனா இரு நாடுகளும் தன்னுடன் நெருக்கமான உறவை வைத்துள்ளது என கூறியுள்ள ரஷ்யா, இப்போது நடந்து வரும் பிரச்சினை குறித்து அதிக அக்கரை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

russia
russia

ரஷ்யா பிரதமரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஷ்கோவ் நிருபர்களிடம் இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், “இந்தியா-சீனா எல்லையில் நடந்து வரும் பிரச்சினைகள் குறித்து நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். இரு நாடுகள் இப்போதுள்ள பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளும் வல்லமை படைத்தவை என்பது எங்களுக்குத் தெரியும். அதே வேளையில் இந்த பிரச்சினை மேலும் பெரிதாகாமலிருக்க ஜூன் 23ஆம் தேதி இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் வீடியோ கான்பிரன்சில் ஈடுபட இருக்கிறோம்” என்றார்.

ஜூன் 30 வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு – எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு …!

ரஷ்யச் செய்தி தொடர்பாளரான க்ரீம்லின் இந்த விவகாரம் குறித்துக் கூறுகையில், “இந்தியா-சீனா இரு நாடுகளும் எங்களுடன் நெருங்கிய நாடுகள். பல முக்கிய ஒப்பந்தங்கள் நாங்கள் போட்டிருக்கிறோம். எங்களுக்குள் இருக்கும் உறவு என்பது மரியாதையின் காரணமாகவும் பரஸ்பர நன்மையினாலும் உருவானது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here