ஜூன் 30 வரை அம்மா உணவகத்தில் இலவச உணவு – எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு …!

0
amma unavakam
amma unavakam

தமிழகத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் 5ம் கட்ட ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் ஏழை மக்களின் இயல்பு வாழ்க்கை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் அவர்களின் நலன் கருதி ஊரடங்கு போடப்பட்ட மாவட்டங்களில் உள்ள  அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அம்மா உணவகத்தில் ஜூன் 30 வரை உணவு இலவசம்

amma unavakam
amma unavakam

ஊரடங்கு காலத்தில் விடுமுறை – அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்..!

சென்னை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் 12 நாட்களுக்கு அமல்படுத்தப்பட உள்ளது.இந்நிலையில், இப்பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து அம்மா உணவகங்களிலும் நாளை முதல் ஜூன் 30 வரை கட்டணமின்றி விலையில்லாமல் உணவு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இன்று நள்ளிரவு முதல் 4 மாவட்டங்களில் அமலாகும் ஊரடங்கின்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.ஏற்கெனவே மே 31-ம் தேதி வரை இலவசமாக உணவு வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் ஜூன் 30-ம் தேதி வரை 12 நாட்களுக்கு இலவசமாக உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் 400-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் உள்ளன.அம்மா உணவகங்கள் அல்லாமல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டகளில் உள்ள சமுதாய உணவுக் கூடங்கள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு முதியோர், நோயுற்றவர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கின் விதிமுறைகள்

amma unavakam
amma unavakam

இன்று நள்ளிரவு 12 மணி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வர உள்ளது. இதை அடுத்து முன்னதாக ஊரடங்கு எப்படி இருகாதோ அதேபோல் பயங்கர விதிமுறையுடன் இருந்தது அதே விதிமுறையுடன்தான் இம்முறையும் ஊரடங்கு கொண்டுவரப்படும்.தனியார் வாகனங்கள் ஆட்டோ உள்ளிட்டவை இயங்குவதற்கு அனுமதி கிடையாது. தேனீர் கடைகள் திறக்க அனுமதி கிடையாது. பொது போக்குவரத்து இயங்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here