ஊரடங்கு காலத்தில் விடுமுறை – அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்..!

0
government employees
government employees

தமிழகத்த்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஜூன் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்கள்,தனியார் நிருவங்கள் என அனைத்தும் முடங்கி உள்ள நிலையில் அரசு ஊழியர்களின் விடுப்பில் மாற்றம் செய்து தமிழகஅரசு அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்களின் விடுப்பில் மாற்றம்

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் அறிவிக்கப்பட்ட  ஊரடங்கு மார்ச் 25 முதல் மே 17 வரை பணிக்கு வராத அரசு ஊழியர்கள் பணிக்கு வந்ததாக கருதப்படுவர். ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பை முறைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.மே 18-ம் தேதிக்குப் பின் 50 சதவீத பணியாளர்களுடன் சுழற்சி முறையில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டது அதில் குறைந்த பட்ச போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டும் பணிக்கு வரவில்லையென்றால் அது விடுப்பாகவே கருதப்படும்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

tn government
tn government
அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் – மாநில அரசு உத்தரவு…!

மே 18-ம் தேதிக்குப் பின் விடுப்பில் இருந்த ஊழியர்கள் அதற்கான விடுமுறை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம்.கொரோனா அறிகுறி இருந்து விடுப்பில் இருந்தாலோ, அல்லது குடும்பத்தினரில் யாருக்கேனும் கொரோனா அறிகுறி இருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு பகுதியில் வசித்தாலோ அதற்கான உரிய சான்றிதழ்களை சமர்பித்தால் அது ஊதியப் பிடித்தம் இல்லாத சிறப்பு விடுப்பாக கருதப்படும்.கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வரவில்லையென்றாலும் அது பணிக்காலமாகவே கருதப்படும்.தமிழக அரசின் அனைத்து வகை ஊழியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு இது பொருந்தும்.இவ்வாறு கூறப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here