அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் – மாநில அரசு உத்தரவு…!

0
salary
salary

கொரோனா நோய் தொற்று நாடு முழுவதும் குறையாமல் தான் இருக்கிறது இதனால் பெருமளவில் பாதிப்பும் பொருளாதாரமும் வீழ்ந்துள்ள நிலையில் தெலுங்கானாவில் சம்பள குறைப்பு உள்ளிட்ட நிதி நடவடிக்கைகளுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

6000mAh பேட்டரியுடன் டெக்னோ பவர் 2 – இந்தியாவில் அறிமுகம்…!

சம்பளத்தில் பிடித்தம்

telengana cm
telengana cm

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் முதலமைச்சர் ஆன சந்திரசேகர ராவ் ஆட்சி நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கால் அம்மாநிலத்தில் நிதி நெருக்கடி பெருகியுள்ளது அதனால் அந்த நிலைமையை சரி செய்ய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட அளவில் பிடித்தம் செய்யப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்து உள்ளது. மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா பேரழிவு மற்றும் அவசர பொது சுகாதார நிலை 2020 சிறப்பு சட்டத்திற்கு  நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார்.இந்த சட்டம் மார்ச் 24 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவி வரும் இக்காலகட்டத்தில் நிதி வருவாய் குறைந்துள்ளதால் அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்கள் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தரப்படும் ஊதியம் உள்ளிட்ட நிதி செலவினங்களை, குறைக்கவோ, தாமதிக்கவோ அரசுக்கு அதிகாரம் உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here