கொரோனவை கட்டுப்படுத்த இதுதான் சரியான வழி – அரசுக்கு அட்வைஸ் கூறும் சேரன்..!

0
seran
seran

கொரோனா பாதிப்பு தற்போது நாடெங்கிலும் மோசமான நிலையை ஏற்படுத்து வருகிறது. சென்னையிலும் இதன் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் சென்னையில் வாழும் நோய் தொற்று இல்லாத வெளியூர் ஆட்களை அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்குமாறு சேரன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பு

சீனாவில் இருந்து பரவிய இந்த கொரோனா தொற்று உலக நாடுகள் அனைத்திலும் காட்டுத்தீ போல பரவ தொடங்கியது. எனவே அனைத்து நாடுகளிலும் பொது முடக்கம் செய்யப்பட்டது. இந்தியாவிலும் குறைந்த எண்ணிக்கையில் இருந்த இந்த கொரோனா தற்போது படிப்படியா அதிகரித்துள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

corona virus in chennai
corona virus in chennai

மேலும் தற்போது சென்னையில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. மார்ச் 24 முதல் அமலுக்கு வந்த இந்த ஊரடங்கு தற்போது 90 நாட்கள் ஆகியும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகம் பாதிப்படைந்தது சென்னை தான். இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான சேரன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேரன் வேண்டுகோள்

இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் கூறியதாவது, “தமிழக முதல்வர், அமைச்சர் விஜயபாஸ்கர், அய்யா.. சென்னையின் நிலை சுகாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கவலைக்கிடமாக மாறிக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் பயமும் கொரோனாவும் அதிகரிக்கும் நிலையில் வீட்டில் 90 நாட்களாக முடங்கி கிடப்பவர்களுக்கு நாமும் பாதிக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சம். 15 நாட்களில் முடிந்துவிடும் என நினைத்து சொந்த ஊருக்கு போகாமல் தங்கியவர்கள் நிறைய.

500 சீன இறக்குமதி பொருட்கள் – புறக்கணிக்க இந்திய வர்த்தக சங்கம் முடிவு..!

migrant workers
migrant workers

இப்போது போக நினைக்கிறார்கள். சுகாதாரமாக இருக்கும் அவர்கள் ஏதோ ஒரு காரணங்களுக்காக வெளியில் இருந்து வரும் நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கும் அதன்மூலம் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே கொரோனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்தவழி சென்னையில் வாழும் நோய்தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பி வைப்பதே ஆகும். அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களை கண்டறியவும் விரைவில் சரிசெய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து.

corona_virus test
corona_virus test

மக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில் இங்கு யாரிடமும் கேட்க முடியாத நிலையில் அவர்களை உயிரோடு வைத்துக்கொள்ள அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல நினைக்கிறார்கள். அது நியாயமும் கூட. அதற்காக முறையே யோசித்து செயலாற்ற வேண்டியது தங்களின் கடமையாகும் என நினைவூட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here