500 சீன இறக்குமதி பொருட்கள் – புறக்கணிக்க இந்திய வர்த்தக சங்கம் முடிவு..!

0
bboycott of china products
bboycott of china products

இந்தியா- சீனா எல்லை பிரச்சனை கடந்த 2 மாதத்திற்கு மேலாக நடந்து வருகிறது. மேலும் இதனால் ஏற்பட்ட தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 20 பேர் வீர மரணம் அடைந்த நிலையில் சீனாவுடன் வர்த்தக உறவுகளை துண்டிக்க கோரியுள்ளனர்.

இந்தியா-சீனா

இந்திய- சீனா எல்லையில் நடைபெற்ற தாக்குதலில்இந்திய தரப்பில் கர்னல் உட்பட 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சீனாவிலும் அதிக உயிரிழப்பு ஏற்பட்டன.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

india china ladaak border
india china ladaak border

இந்த நிலையில் இந்தியா முழுவதும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை புறக்கணிக்க கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.சீனாவுடன் வர்த்தக உறவுகளை துண்டிக்க கோரியுள்ளனர்.

கெய்ட்

இந்தியாவில் விற்கப்படும் 500 வகையான சீனப் பொருட்களை பட்டியலிட்டு அவற்றை புறக்கணிக்கப் போவதாக “கெய்ட்” என்றழைக்கப்படும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வணிக இழப்பு இருந்தபோதிலும், சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். ஜூன் 10 ஆம் தேதி தொடங்கிய சீனப் பொருட்களைப் புறக்கணிப்பதை எதிர்த்து நாடு தழுவிய இயக்கத்தை முடுக்கிவிட்டுள்ளோம்.

சீன பொருட்களை புறக்கணிப்போம் – இணையத்தில் அதிகமாக தேடிய இந்தியர்கள்..!

இதன் முதல் கட்டமான டிசம்பர் 2021க்குள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் சுமார் ஒரு லட்சம் கோடி பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உள்ளதாக “கெய்ட்” அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேவால் கூறியுள்ளார்.

bboycott of china products
boycott of china products

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு 3,000 க்கும் மேற்பட்ட பொருட்களை வரிசைப்படுத்தியுள்ளது. இந்த 500 பொருட்களில் பொம்மைகள், துணிகள், அன்றாட பொருட்கள், சமையலறை பொருட்கள், ஹார்டுவேர்கள் உள்ளிட்டவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தயாரிப்புகளே நமது பெருமை என்று தெரிவித்துள்ள கெய்ட் அமைப்பு, சீன பொருட்களின் விளம்பரங்களில் நடிக்க இந்திய திரை நட்சத்திரங்கள் இனி ஒப்பந்தங்கள் போட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here