சீன பொருட்களை புறக்கணிப்போம் – இணையத்தில் அதிகமாக தேடிய இந்தியர்கள்..!

0
avoid china products
avoid china products

இந்தியா – சீனா லடாக் பிரச்சனையில் நடந்த அத்துமீறலை அடுத்து அந்நாட்டு பொருட்களை புறக்கணிக்க இந்தியர்கள் தீவிரமாக களமிறங்கி வருகின்றனர்.

லடாக் எல்லை பிரச்சனை

இந்தியா சீனா இடையே லடாக் பிரச்சனை 2 மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த பிரச்சனையால் நடந்த தாக்குதலில் இந்தியா ராணுவத்தை சேர்ந்த 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.

கொரோனாவிற்கு தன்சானியா மூலிகை மருந்து – வைரலான தகவல் உண்மையா!!

india china border
india china border

அதற்கு பதிலடி தரும் விதத்தில் சீனாவிலும் பல மரணங்கள் நிகழ்ந்தன. எனினும் அதில் உடன்பாடில்லாமல் சமூக வலைத்தளத்தில் தங்களது கோவத்தை காட்டி வருகின்றனர்.

சீனா பொருட்கள்

அதனை தொடர்ந்து தற்போது சீனா பொருட்கள் இந்தியாவில் விற்பது தடை செய்ய வேண்டும் என முயற்சித்து வருகின்றனர். மேலும் சீனா பொருட்களை தவிர்த்து இந்திய பொருட்கள் மட்டும் பயன்படுத்த கோரிக்கை விடுத்தது வருகின்றனர். மேலும் ஆண்டு தோறும் ரூ 5.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. மேலும் இந்தியர்கள் சீனா பொருட்களை தவிர்க்க கூகுலில் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மேலும் என்ன என்ன தேடியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

remove china apps
remove china apps

* List of Chinese Products in India

* Ban Chinese Products

* Boycott Chinese Products

உள்ளிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடி வருகின்றனர். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பொறியாளர் சோனம் வாங்சுக், Made in China பொருட்களை மட்டும் தவிர்ப்பதை நோக்கமாக கொள்ள வேண்டாம். ஒட்டுமொத்தமாக அனைத்து சீனப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். Made in India பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது பதிவு தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் சீனாவின் பிரபல சமூக வலைத்தள அப்ளிகேஷனான TikTok-ஐ பலரும் தங்கள் ஸ்மார்ட்போனில் இருந்து அன்-இன்ஸ்டால் செய்து தருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here