தனியாருக்கு நிலக்கரி சுரங்க ஏலம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!

0
Modi
Modi

சுயசார்பு திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் உள்ள 41 நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் நடைமுறையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

சுயசார்பு இந்தியா:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நலிந்த பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதில் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஏலம் விடப்படும் என பிரதமர் மோடி அவர்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன் படி இன்று 41 நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டு உள்ளன. எரிசக்தி, எக்கு, அலுமினியம் மற்றும் இரும்பு தொழிலுக்கு தொழிலுக்கு தேவைப்படும் நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் விடப்படுவது புதிய தொடக்கமாக உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

coal mine
coal mine

சீன பொருட்களை புறக்கணிப்போம் – இணையத்தில் அதிகமாக தேடிய இந்தியர்கள்..!

இதன் மூலம் நாட்டின் தற்சார்பு நிலை, எரிசக்தி தேவை ஆகியவை மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. மத்திய நிலக்கரித்துறை அமைச்சகமும் ஸ்விக்கியும் இணைந்து ஏல நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. திட்டத்தை துவக்கி வைத்த பின்னர் பேசிய பிரதமர் மோடி, வரலாற்று சிறப்பு மிக்க இந்த நடவடிக்கையால், உற்பத்தி அதிகரிப்பின் தனியார் பங்களிப்பு அதிகரிக்கும் என தெரிவித்து உள்ளார். இதன் மூலம் அடுத்த 5 அல்லது 7 ஆண்டுகளில் 33,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 70 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 2.10 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என மோடி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here