கொரோனாவிற்கு தன்சானியா மூலிகை மருந்து – வைரலான தகவல் உண்மையா!!

0
covidol
covidol

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் இன்னும் குறையாமல் தான் இருக்கிறது.ஆனால் இந்த கொரோனாவுக்கு எல்லா நாடும் முறையான மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் சில பொய்யான தகவலும் கொரோனா மருந்து உள்ளது எனவும் தப்பான வதந்திகள் பரவி வருகின்றன.

புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை – வாகன ஓட்டிகள் அவதி..!

தன்சானியா கொரோனா மருந்து வதந்தியே

covidol
covidol

தன்சானியா நாட்டு அரசு கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தது அது இப்பொழுது பெரும் விரலில் உள்ளது.கோவிடோல் என்னும் மூலிகை மருந்து கொரோனா நோயை சரி செய்யும் சக்தி  அதற்கு இருக்கிறது இதை நங்கள் கண்டுபிடித்துள்ளோம் என தெரிவித்தது.இந்த மருந்தை கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பயன்படுத்தலாம் என தன்சானியா அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று சமூக வலைதளங்களில் இந்த தகவல் வைரலாகி வருகிறது.தன்சானியா அதிபர் ஜான் மகுஃபுலி மற்றும் சுகாதார துறை மந்திரி மற்றும் கோவிடோல் மருந்தின் புகைப்படங்களும் இருக்கின்றன.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

இந்த பதிவின் தகவல்  பற்றி ஆய்வு செய்ததில் அந்த தகவல் பொய் என தெரிந்தது.கோவிடோல் மருந்து எந்த ஒரு ஆய்விற்கும் அனுமதிக்கப்படவில்லை கொரோனா நோயை குணப்படுத்தும் மருந்துக்கு தன்சானியா அரசு எதுவும் இதுவரை அனுமதி அளிக்கவில்லை.இது நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது என்றும் நிரூபிக்கப்படவில்லை.கொரோனா தொற்று பாதிப்பை தன்சானியா மூலிகை மருந்து குணப்படுத்தும் என்ற தகவல் முற்றிலும் வதந்தி என உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுபோல் வதந்திகள் பரப்ப வேண்டாம் இப்படி வதந்தியால் சில உயிர்களும் தெரியாமல் பயனப்டுத்தி பலியாகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here