வத்திக்குச்சி வனிதாவுக்கு மூன்றாவது திருமணம் – இவர்தான் மாப்பிள்ளை…!

0
vanitha peter paul
vanitha peter paul

பிக் பாஸ் வத்திகுச்சி வனிதாவுக்கு மூன்றாவது திருமணம்.பீட்டர் பால் என்பவருக்கும் வனிதாவுக்கு வரும் ஜூன் 27  திருமணம் நடக்கப்போவதாக திருமண பத்திரிகை ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு மற்றும் வைரலிலும் இருக்கிறது.

எண்ணம் போல் தான் வாழ்க்கை – Motivational Tamil Stories

வனிதா விஜயகுமாரி திருமண வாழ்க்கைகள்

vanitha vijayakumar
vanitha vijayakumar

தமிழ் சினிமாவின் நடிகரான விஜயகுமார் மறைந்த நடிகை மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா.இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக 1995 ஆம் ஆண்டு ‘சந்திரலேகா’ என்னும் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.பின் அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.அவர் நடித்த படங்களும் அந்த அளவில் எதூவும் ஓடவில்லை எனவே அவர் திரையுலகை விட்டு விலகினார்,2000ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை முதல் திருமணம் செய்துகொண்டார்.ஆகாசுக்கும் வனிதாவுக்கு விஜய ஸ்ரீஹரி என்கிற மகனும் ஜோவிகா என்கிற மகளும் பிறந்தனர்.பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு ஆகாஷை விவாகரத்து செய்தார்.அதில் ஸ்ரீஹரி தன் அப்பா ஆகாஷுடன் இருக்கிறார். மகள்கள் வனிதாவுடன் இருக்கிறார்.அதன்பின் வனிதா இரண்டாவது திருமணத்திற்கு தயார் ஆகி அதே ஆண்டு ஆந்திராவை சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2வது திருமணம் செய்தார்.ஜெயந்திகா என்னும் பெண் குழந்தை பிறந்தது இந்த மண வாழ்க்கை சில வருடத்தில் கருத்து வேறுபாடால் 2010 ஆம் ஆண்டு விவாகரத்து ஆனது.ஆனால் இப்பொழுது இரு மகள்கள் மட்டுமே வனிதாவுடன் இருக்கிறார்கள்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

வத்திக்குச்சியாக மாறிய வனிதா

vanitha vijayakumar big boss
vanitha vijayakumar big boss

பிக் பாஸ் என்னும் தொலைக்காட்சி நிகச்சி மூலம் மீண்டும் அவர் பிரபலம் ஆகினார்.அதில் வனிதா விஜயகுமாருக்கு வத்திக்குச்சி வனிதா என்று பெயர் கிடைத்தது.அந்த நிகழ்ச்சி பெரும் விறுவிறுப்பு அடைந்ததற்கு காரணமே வனிதாதான்.அதன்பின் வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தற்போது வனிதா யூடியூப் சேனலை துவங்கி நடத்தி வருகிறார்.

40 வயதில் மூன்றாவது திருமணம்

vanitha daughters
vanitha daughters

இந்த நிலையில் வனிதாவின் 3வது திருமணம் பற்றி வந்த தகவலை விசாரித்தபோது வரும் 27ம் தேதி மாலை 4 மணியளவில் கொரோனா காரணத்தால் சென்னையிலுள்ள வீட்டில் பீட்டர் பால் என்பவருடன் நடக்கிறது என்று உறுதியானது,இதைப்பற்றி வனிதாவிடம் கேட்டபோது, “இருவரும் திருமணம் செய்துகொள்ளலாமா என்று பீட்டர் பால் கேட்டபோது, எனது வாரிசுகள் சம்மதித்தால் எனக்கு சம்மதம் என்றேன். உடனே அவர்களிடம் அவர் பேசி சம்மதம் பெற்ற நிலையில் எனது 40வது வயதில் இந்த திருமணம் நடக்க உள்ளது என்றார்

என் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்கு பிறகும் எனக்கு திருமணம் மீது நம்பிக்கை உள்ளது. இந்த ஆண்டு நான் 40 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த லாக்டவுனால் நம் வாழ்க்கை முக்கியத்துவம் குறித்து நிறைய தெளிவு பிறந்திருக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்கம் தன் பெர்ஃபெக்ட் மேனை கண்டுபிடிக்கும் கனவு இருக்கும். என் கனவு தற்போது நிஜமாகியுள்ளது.பீட்டர் பால் என் வாழ்க்கையில் வந்தார். அவரால் நான் பாதுகாப்பாக உணர்கிறேன். லாக்டவுனின்போது என் யூடியூப் சேனலுக்கு டெக்னிக்கல் உதவி இல்லாமல் தவித்தபோது ஒரு நண்பராக வந்து உதவி செய்தார்.என் குழந்தைகள் தான் எனக்கு முக்கியம் என்பது உங்களுக்கே தெரியும்.என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவர் கேட்டபோது வார்த்தையே வரவில்லை.என் குழந்தைகள் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றேன். அவர் என் குழந்தைகளிடம் பேசியபோது அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். இது தான் என் வாழ்வில் நடந்துள்ள சிறந்த விஷயம் என்று என் மகள் கூறியபோது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. தனியாக இருந்து மகள்களை பார்த்துக் கொள்வது எளிது அல்ல. அதிலும் என் குடும்பத்தின் ஆதரவு எதுவும் இல்லாத போது.எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆசிகள் தேவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here