ஹோட்டல்களில் சீன உணவுகளுக்கு தடை – மத்திய அமைச்சர் அதிரடி..!

0
chinese foods

இந்தியா – சீனாவிற்கு இடையே மோதல் அதிகரித்து உள்ளதை தொடர்ந்து, சீன உணவுகளை இந்திய மக்கள் புறக்கணிக்குமாறு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

சீன இறக்குமதி பொருட்கள்:

இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் நடைபெற்று வரும் பிரச்னை கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் எடுத்து உள்ளது. லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு இந்திய ராணுவம் சார்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. சீன பொருட்கள் மீது இந்திய மக்களுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

china foodss
china foodss

தனியாருக்கு நிலக்கரி சுரங்க ஏலம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்..!

ஏற்கனவே சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 500 விதமான பொருட்களை புறக்கணிக்க போவதாக இந்திய வர்த்தக சங்கம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, சீன உணவுகளை புறக்கணிக்குமாறு இந்திய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். மேலும் ஹோட்டல்களில் சீன உணவுகளை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here