மீண்டும் களத்தில் பீலா ராஜேஷ் – மாவட்ட சிறப்பு அதிகாரியாக நியமனம்..!

0
peela rajesh
peela rajesh

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட சிறப்பு அதிகாரியாக முன்னாள் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கொரோனா தடுப்பு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்த முறை கடுமையானதாக ஊரடங்கு இருக்கும் எனவும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என அரசு தெரிவித்து உள்ளது. முழு ஊரடங்கு உத்தரவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட எல்லைகளில் இ-பாஸ் இல்லாமல் அனுமதி தடை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Peela Rajesh
Peela Rajesh

அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் – மாநில அரசு உத்தரவு…!

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில் சுகாதாரத்துறை செயலாளர் பொறுப்பில் இருந்து வணிக வரித்துறை செயலாளராக மாற்றப்பட்ட பீலா ராஜேஷ் அவர்கள் மீண்டும் கொரோனா தடுப்பு பணியில் இறங்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here