புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டம் – நிர்மலா சீதாராமன்..!

0
Nirmala-Sitharaman
Nirmala-Sitharaman

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான வேலை வழங்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளாளர்கள்

கொரோனா பாதிப்பால் நாடே ஸ்தம்பித நிலையில் இதில் அதிகம் பாதிப்படைந்தது புலம்பெயர் தொழிலாளர்கள் தான். இதனால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

புலம்பெயர் தொழிலாளாளர்கள்
புலம்பெயர் தொழிலாளாளர்கள்

இதனை குறித்து மத்திய நிதியமைச்சர் சீதாராம் நிருபர்களிடம் கூறியதாவது, ” பொருளாதார இழப்பை சரி செய்ய சில நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 116 மாவட்டங்கள், 6 மாநிலங்களில் அதிகளவு புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். அரசின் 25 திட்டங்களை ஒருங்கிணைத்து, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு 125 நாட்கள் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தை தாக்க சீனா பயன்படுத்திய ஆயுதம் – லீக்கான புகைப்படங்கள்..!

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்
100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

ஜல்ஜீவன், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் அவர்கள் வேலைபெறுவார்கள். அவரவர் மாநிலங்களில், மாவட்டங்களில் ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணி வழங்க முயற்சி செய்யப்படுகிறது.அவர்களின் திறனுக்கு ஏற்ப பணி வழங்கப்படும். புலம்பெயர் தொழிலாளர்களை, ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களில் ஈடுபடுத்தப்படுவார்கள். உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிக்குழு பரிந்துரைத்த நிதியை மத்திய அரசு சமீபத்தில் விடுவித்தது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here