மீண்டும் களத்தில் இறங்கும் ஸ்ரீசாந்த் – தடை காலம் முடிவடைந்தது..!

0
sreesanth
sreesanth

மேட்ச் பிக்சிங் இல் ஈடுபட்டதாக இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த்க்கு கேரளா அரசு 7 ஆண்டுகளுக்கு பிறகு கேரளா ரஞ்சி தொடரில் சேர்த்து கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளது.

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்:

sreesanth
sreesanth

பிப்ரவரி 6 1983 ஆம் ஆண்டு பிறந்த இவர் இந்தியா அணியின் முன்னாள் வீரர் ஆவர். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய வடிவங்களில் விளையாடினார். வலது கை விரைவு வீச்சாளரான இவர் வலது கை இறுதிக்கட்ட மட்டையாளரும் ஆவார். கேரளா மாநிலத் துடுப்பாட்ட அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒரு நாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரீசாந்த், இதுவரை மொத்தமாக 169 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

மேட்ச் பிக்சிங்:

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக அவருக்கும், ராஜஸ்தான் அணியில் விளையாடிய அஜித் சண்டீலா மற்றும் அன்கிட் சவான் ஆகியோருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஸ்ரீ சாந்த், கேரள மற்றும் உச்சநீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார்.

ajith
ajith

இந்த வழக்கில் ஸ்ரீ சாந்தின் தடை காலத்தை குறைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவரின் வாழ்நாள் தடையை 7 ஆண்டுகளாக குறைத்து பிசிசிஐ சார்பில் கூறப்பட்டது.அதனால் திரைப்படங்களில் நடித்தார். இதன் இடையில் இந்த செப்டம்பர் மாதத்துடன் இவரது தடை நீங்க உள்ளது. ஸ்ரீ சாந்தின் தடைக்காலம் முடிந்த பிறகு அவரை கேரள ரஞ்சி தொடர் அணியில் சேர்த்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக கேரள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீசாந்தின் பயிற்சியாளர் யோஹானன் கூறுகையில்” ஸ்ரீ சாந்த் கேரள அணிக்காக விளையாட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்; அவரின் திறமையை என்னவென்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளார்; இதனால் அவருக்கான அனைத்து ஆதரவையும், ஊக்கத்தையும் தர நாங்கள் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here