சுஷாந்த் அனுப்பிய கடைசி மெசேஜ் – பத்திரிகையாளர் ட்வீட்…!

0
sushant singh rajput

பாலிவுட் சினிமாவில் கடந்த சில மாதங்களாக நடிகர்கள் சிலர் எதிர்பாத்த விதமாகவும் உடல் நிலை சரி இல்லாமலும் இறந்து வருகின்றனர்.சமீபத்தில்  34 வயதான நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் மொத்த சினிமாவையும் இந்தியாவையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுஷாந்த் மரணத்திற்கான காரணம் தெரியாத நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதியின் “கொரோனா குமார்” – இயக்குனர் கோகுலின் வைரல் வீடியோ…!

சுஷாந்த் மரணத்தின் காரணம்

sushant singh
sushant singh

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் சுஷாந்த்தின் மறைவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்ல கொலையா என குறித்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அவரது மரணத்திற்கான உண்மையான காரணம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

சுஷாந்த் மரணத்தில் அடிபடும் பாலிவுட் நடிகர்கள் பெயர் 

சுஷாந்த் மரணத்தில் தற்போது பாலிவுட் பிரபலங்களான இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர், நடிகைகள் ஆலியா பட், சோனம் கபூர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகை ஆலியா பட்டின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 லட்சம் அளவுக்கு குறைந்துள்ளதாகவும்,கரண் ஜோகரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரம் வரை குறைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்த விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

எனக்குதான் கடைசியாக மெசேஜ் அனுப்பினார்

sushant message
sushant message

சுஷாந்த் சிங் ராஜ்புட் கடைசியாக தனக்கு அனுப்பிய மெசேஜை டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் ஒரு பத்திரிகையாளர்.அதில் அவர் கூறும்போது “சுஷாந்த் எனக்கு அனுப்பிய கடைசி மெசேஜ். சார் நான் விரும்பிய அனைத்தும் நான் பெற்று விட்டேன். யாருடைய இருப்பு மற்றும் மறைவிற்காக எனது மன அமைதி மற்றும் புன்னகையுடன் நான் பேரம் பேச விரும்பவில்லை. இத்துடன் எல்லாம் நன்றாக மாறப்போகிறது. காலை வணக்கம்” என்று மெசேஜ் அனுப்பினார் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here