நடப்பாண்டில் 25 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு – வோடபோன் நிறுவனம் வேதனை!!

0
vodafone idea
vodafone idea

வோடஃபோன் ஐடியா நிறுவனம் கடந்த ஆண்டை விட இந்த காலாண்டில் பெரும் இழப்பை கண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.4,874 கோடி இழப்பு கண்ட நிறுவனம் இந்த ஆண்டு ரூ.25,460 கோடி கண்டுள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

வோடஃபோன் ஐடியா – ரூ.25,500 கோடி இழப்பு 

இந்தியாவின் பணக்காரரான அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவின் 2016ல் இந்தியில் அறிமுகம் செய்தது. ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இலவச கால் மற்றும் இன்டர்நெட் வழங்கியது இதனால் பிரபல மற்றும் முன்னிலையில் இருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆன ஏர்டெல் , பிஎஸ்என்எல், ஏர்செல், வோடஃபோன், ஐடியா உள்ளிட்ட அனைத்து நிறுவன வாடிக்கையாளர்கள் ஜியோ பயன்படுத்தினர்.

indian sim networks
indian sim networks

ஜியோ பல சலுகைகளை மக்களான வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்கியது. ஜியோவால் எரிசெல் நிறுவனம் இந்தியாவில் மூடபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்பொழுது பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா தனது காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் – ஜூன் மாதங்கள் வரையில் 10,659.30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. 8 சதவீதம் குறைவு போன காலாண்டின் வருவாயை விட மிக குறைவாகும்.

vodafone idea
vodafone idea

ஏற்கெனவே, ரூ. 4,874 கோடி ரூபாய் கடந்த நிதியாண்டில் இழப்பு ஏற்பட்டிருந்தது. அதேபோல் இந்த ஆண்டின் வருவாயில் 25,460 கோடி ரூபாய் இழப்பு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. ஒரு மாதத்துக்கு ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்படும் வருவாய் (ARPU) 2019 காலாண்டில் 121 ரூபாயாக இருந்து 114 ரூபாயாக இந்த நிதியாண்டில் குறைந்துள்ளது.291.1 மில்லியனில் இருந்த வாடிக்கையாளர்கள் 279.8 மில்லியனாக குறைந்துவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here