இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு – முழு விபரங்கள் இதோ!!

0
Public Exam
Public Exam

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஆகஸ்ட் 10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைவதற்கு முன்பே 12ம் வகுப்பில் 1 பாடம் தவிர அனைத்து பாடங்களுக்கும் தேர்வுகள் நடந்து முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் 10ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற இருந்த சமயத்தில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்த காரணத்தாலும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

public exams
public exams

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை கொண்டு 80 சதவீதமும், வருகைப் பதிவேட்டினை வைத்து 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து இருந்தார். இதனால் பள்ளிகள் வருகைப்பதிவேடு, ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை ஒப்படைக்குமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடந்து முடிந்தது.

நாடு முழுவதும் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – மத்திய அரசு ஆலோசனை!!

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 10) காலை 9.30 மணிக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்து உள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in., www.dge1.tn.nic.in., www.dge2.tn.nic.in., ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி மாணவர்கள் பதிவு செய்த தொலைபேசி எண்ணிற்கும் மதிப்பெண் விபரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here