‘சித்ராவுக்கு மது பழக்கம் உள்ளது, 3 பேரை காதலித்து திருமணம் வரை சென்றுள்ளார்’ – ஹேமந்த்தின் தந்தை பகீர் குற்றச்சாட்டு!!

0
"EX MLA  வால் விஜே சித்ராவுக்கு இதெல்லாம் நடந்துச்சு - அவர் கிட்ட விசாரிங்க! குண்டை தூக்கி போட்ட கணவர் ஹேமந்த்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரின் மூலமாக முல்லையாக பிரபலமானவர் தான் நடிகை சித்ரா. இவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது கணவர் ஹேமந்த் சித்ராவை சந்தேகப்பட்டு துன்புறுத்தியதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஹேமந்த்தின் தந்தை ரவிசந்திரன், தனது மகன் நிரபராதி எனவும், சித்ராவுக்கு மிரட்டல் விடுத்தது அவருக்கு நன்கு தெரிந்த நபர்கள் தான் என்று கூறி காவல் ஆணையாளரிடம் மனு ஒன்றை அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஹேமந்த் கைது செய்யப்பட்ட போதே “யாரையோ காப்பாற்ற என் மகனை கைது செய்துள்ளார்கள்” என்று புகார் தெரிவித்திருந்தார், ஹேமந்த்தின் தந்தை. தற்போது புதிய திருப்பமாக, தான் சமூக வலைதளங்களிலிருந்து பல்வேறு ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும், சித்ராவுக்கு மது பழக்கம் இருந்தது எனவும், ஏற்கனவே மூன்று ஆண்களை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று பிறகு நின்றுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சன் சித்ராவுடன் டேட்டிங் சென்ற போது எடுத்த புகைப்படங்களை காட்டி மிரட்டல் விடுத்ததாக சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகின்றன எனவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், சித்ராவுக்கு நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தது, கடந்த ஆண்டு சித்ரா திருவான்மியூரில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான வீடு ஒன்றையும், ஒரு கோடி மதிப்பிலான ஆடி கார் ஒன்றையும் வாங்கியிருந்தார். அதற்கான முதலீட்டு தொகையை அவருக்கு மிக தெரிந்த நெருங்கிய நபர்கள் கொடுத்ததாகவும், மீதி தொகையினை அவர் மாத தவணையாக செலுத்தி வந்ததாகவும் கூறினார்.

இவை அனைத்தும் சித்ராவின் மார்க்கெட்க்கு இருந்த மதிப்பு தான். சித்ரா திருமணம் செய்துகொண்டு விட்டால் அவரது பிரபலம் குறைந்துவிடும் என்ற நோக்கத்திலேயே பணம் அளித்து முதலீடு செய்தவர்கள் மிரட்டல் விட்டிருக்கலாம் எனவும், அவர் இறுதியாக தங்கியிருந்த பிளசண்ட் ஒன் டே விடுதியின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அளிக்கப்பட்டதற்கான காரணத்தையும், அவருக்கு மிரட்டல் விடுத்த தொழிலதிபர்கள், சினிமா மற்றும் சின்னத்திரை சார்ந்த நபர்கள், அரசியல்வாதிகள், பழக்கமான பெரிய நபர்கள் ஆகியோரையும் சித்ராவின் கைபேசியின் உதவியுடன் கண்டுபிடித்து கைது செய்ய வேண்டுமெனவும், நிரபராதியான தனது மகனை விடுதலை செய்ய வேண்டுமெனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

ஹேமந்த்தின் தந்தை அளித்த மனுவின் மீது விசாரணை நடைபெற்றால் தொழிலதிபர்களும், முக்கியப்புள்ளிகளும், திரை நட்சத்திரங்களும், அரசியல்வாதிகளும், சித்ராவின் முன்னாள் காதலர்களும் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here