12 ஆண்டுகளில் முதல்முறை – விராட் கோஹ்லியின் சர்வதேச சதமில்லா 2020!!

0
2வது முறையாக அப்பாவாகும்  விராட் கோலி ?? மருத்துவமனையில் அனுஷ்கா சர்மா! வைரலாகும் போட்டோ!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி ஒரு சர்வதேச சதம் கூட இல்லாமல் 2020ம் ஆண்டை நிறைவு செய்ய உள்ளார். இது கடந்த 12 ஆண்டுகளில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோஹ்லி:

உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஆக திகழும் விராட் கோஹ்லிக்கு 2020 ஆண்டு சவாலாக இருந்துள்ளது. ஏற்கனவே 2008 ஆம் ஆண்டில் 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணி கேப்டன் ஆக உலகக்கோப்பை போட்டியில் களமிறங்கிய விராட் கோஹ்லி அந்த ஆண்டில் ஒரு சர்வதேச சதம் கூட அடிக்கவில்லை. அதற்கடுத்து 12 ஆண்டுகளுக்கு பின்னர் 2020 ஆண்டில் ஒரு சதம் கூட அடிக்காமல் கோஹ்லி நிறைவு செய்ய உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இருப்பினும், 2008 ஆம் ஆண்டில் வெறும் ஐந்து சர்வதேச போட்டிகளில் மட்டுமே கோஹ்லி விளையாடினார். அனால் இந்த முறை (2020 ஆம் ஆண்டு) அவர் 22 சர்வதேச போட்டிகளில் களமிறங்கினார். கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கு இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி – தங்கம் வென்றார் இந்திய வீரர் பங்கல்!!

2009க்குப் பிறகு விராட் கோஹ்லி ஒரே ஆண்டில் 22 சர்வதேச போட்டிகளில் விளையாடியது இதுவே முதல் முறை. இந்த ஆண்டு டிசம்பர் 26 முதல் மெல்போர்னில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட உள்ளது. ஆனால் மனைவி அனுஷ்கா ஷர்மாவிற்கு குழந்தை பிறக்க உள்ளதால் விராட் கோஹ்லி முதல் டெஸ்ட் முடிந்தவுடன் இந்தியா திரும்பி உள்ளார்.

விராட் கோஹ்லி இந்த ஆண்டு ஏழு அரைசதங்களை யும், 2019 இல் ஏழு சதம் மற்றும் 14 அரைசதங்களையும், 2018 இல் 11 சதம் மற்றும் ஒன்பது அரைசதங்ளையும், 2017 இல் 11 சதம் மற்றும் 10 அரைசதங்களையும் விளாசி உள்ளார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது கோஹ்லி மூன்று முறை சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டு உள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் 89, மூன்றாவது மற்றும் இறுதி டி 20 போட்டியில் 85 ரன்களை அடித்தார். முதல் பகலிரவு டெஸ்டின் முதல் இன்னிங்சில் 74 ரன்கள் மட்டுமே அடித்த கோஹ்லி ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதன் மூலம் ஒரு சதம் கூட அடிக்காத ஆண்டாக 2020 விராட் கோஹ்லிக்கு மாறி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here