ரேஷன் கார்டை 3 மாதங்கள் பயன்படுத்தாவிட்டால் ரத்து செய்யப்படுமா?? #FactCheck

0

புதிய ‘ஒரு நாடு, ஒரு ரேஷன் கார்டு’ முறையின் கீழ் மூன்று மாதங்களுக்கு ரேஷன் கார்டுகளை பயன்படுத்தாவிட்டால் அந்த கார்டுகள் ரத்து செய்யப்படலாம் என சமூக வலைதங்களில் வெளியான தகவல் குறித்து மத்திய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் “ஒரு பயனாளி மூன்று மாதங்களுக்கு ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருட்களை பெறவில்லை என்றால், ரேஷன் கார்டை ரத்து செய்யலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது” என ஒரு ஊடக அறிக்கை பரவி வருகிறது. இந்த தகவல் போலியானது. இதுபோன்ற எந்த வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு வழங்கவில்லை” என்று தற்போது விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

“பாஸ்டேக் முதல் லேண்ட்லைனில் ‘0’ வரை” – ஜன.1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!!

ஏற்கனவே ஆந்திரா, கோவா, ஹரியானா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, திரிபுரா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ‘ஒரு நாடு, ஒரு ரேஷன் கார்டு’ திட்டத்தை செயல்படுத்தியுள்ளன என்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டைப் பயன்படுத்தி நாட்டின் எந்தவொரு நியாயமான விலைக் கடையிலிருந்தும் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here