’19 நாட்களில் 16,000 கிராம சபை கூட்டங்கள்’ – டிச.23 முதல் முக ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!!

0
MK Stalin
MK Stalin

கிராமங்கள் தோறும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 10 வரை தொடர்ச்சியாக சுமார் 16,000 கிராமசபை கூட்டங்கள் நடத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது. கடந்த முறை தேர்தலில் நமக்கு நாமே திட்டம் மூலம் மக்களை சந்தித்த ஸ்டாலின் இம்முறை கிராமசபை கூட்டங்கள் மூலம் மக்களை சந்திப்பார் என கூறப்படுகிறது. ஆளும்கட்சிக்கு நெருக்கடியை தரவே இந்த மக்கள் குறைகள் கேட்கும் கிராம சபை கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக தொடங்கியுள்ளதை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றும் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் உட்பட திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

durai-murugan-with-stalin
durai-murugan-with-stalin

இக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன், ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை வரும் டிசம்பர் 23 முதல் நேரடியாக துவங்க உள்ளதாகவும், டிசம்பர் 23 முதல் ஜனவரி 10 வரை அனைத்து கிராமங்களிலும் சுமார் 16,000 கிராம சபை கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சர்க்கரை அட்டையை, அரிசி அட்டையாக மாற்ற இன்றே கடைசி நாள் – இல்லனா பொங்கல் பரிசு ரூ.2500 கிடையாது!!

தேர்தலில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்த ஸ்டாலின் இம்முறை கிராமசபை கூட்டங்கள் மூலமாக மக்களை நேரில் சந்திப்பார் என கூறப்படுகிறது.

தனது தேர்தல் பிரசாரத்தை நேற்று சேலம் – எடப்பாடியில், முதல்வர் பழனிசாமி ஆரம்பித்துள்ள நிலையில் வரும் 23 -ம் தேதி முதல் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார். இனி அரசியல் களத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களை நேரடியாக சென்று சந்தித்து குறைகளை கேட்டு அதன் மூலம் ஆளும் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கவும், மக்கள் கூறும் புகார்களின் அடிப்படையில் தமது தேர்தல் வாக்குறுதி அறிக்கையை தயாரிக்கவும் திமுக திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இரு கட்சிகளும் தேர்தல் களத்தில் நேரடியாக மோதவிருக்கு இந்த நேரத்தில் பரபரப்பான செய்திகளுக்கும், புதிய வாக்குறுதிகளும் பஞ்சமிருக்காது என்றே கூறலாம். ஆளும் அரசுக்கு நெருக்கடி தரும் விதமாக நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களால் திமுக வின் தேர்தல் வியூகம் வெற்றி பெறுமா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here