நான் படிக்காதவன்.. பட விழாவில் எக்குத்தப்பாக பேசி சர்ச்சையில் சிக்கிய சூரி – அவரே அளித்த விளக்கம்!

0

கடந்த வாரம் நடைபெற்ற விருமன் பட விழாவில் நடிகர் சூரி தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து நடிகர் சூரி விளக்கம் தற்போது அளித்துள்ளார்.

நடிகர் சூரி:

தமிழ் சினிமாவில் கிராமப்புற கதைகளை மையமாக கொண்டு படம் எடுப்பவர் இயக்குனர் முத்தையா. இவர் எடுத்த கொம்பன், குட்டிப்புலி, மருது போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது. இந்நிலையில் மீண்டும் நடிகர் கார்த்தியுடன் கை கோர்த்து விருமன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அதிதி ஷங்கர், ராஜ்கிரண், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் நடிகர் சூரி பேசியது பெரும் சர்ச்சையை கெளப்பியது. இது குறித்து நடிகர் சூரி விளக்கம் அளித்துள்ளார். அதாவது, அந்த விழாவில், நடிகர் சூர்யா செய்யும் அகரம் அறக்கட்டளை குறித்து பேசினார். அதில் ஆயிரம் கோவில்களை கட்டுவதை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என்றார். இதற்கு இந்து சமயத்தினர் பல கண்டனங்கள் எழுப்பினர்.

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் அம்மாவை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

இந்நிலையில் நேற்று விருமன் பட குழுவினர் செய்தியாளர்களிடம் சந்திக்கும் போது, நடிகர் சூரி இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அவர் கூறியதாவது, ‘மதுரை மீனாட்சி அம்மன் எனக்கு ரொம்ப பிடிக்கும் மற்றும் நான் கோவில்களுக்கு எதிரானவன் இல்லை, மேலும் மதுரையில் உள்ள என்னுடைய ஹோட்டலுக்கு அம்மன் என்று தான் பெயர் வைத்திருக்கிறேன். நான் பேசியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். நான் படிக்காதவன்.. இதனால் படிப்பின் அருமை எனக்கு தெரியும்’ என நடிகர் சூரி விளக்கம் அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here