விஜய் டிவியில் முக்கிய சீரியல்களில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – அதுவும் இந்த காரணத்தால் தானா??

0

விஜய் டிவியில் தற்போது புதிய சீரியல்கள் பல களமிறங்கவுள்ள நிலையில் சில சீரியல்கள் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவியில் சீரியல்கள் பலவும் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் குறிப்பிட்ட சில சீரியல்கள் தான் ட்ரெண்டிங்கில் ஒளிப்பரப்புகி வருகிறது. மேலும் குக் வித் கோமாளி, சிங்கிள் பொண்ணுங்க, காமெடி ராஜா கலக்கல் ராணி என பல நிகழ்ச்சிகள் சூடுபிடித்து வருகிறது.

மேலும் இரண்டு புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளது. அதாவது தமிழும் சரஸ்வதியும், எங்க வீட்டு பொண்ணு என்ற இரண்டு சீரியல்கள் வெளியாகவுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது.

இப்படி இருக்க தமிழும் சரஸ்வதியும் சீரியல் திங்கள் முதல் தினமும் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனால் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த 2 சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

காற்றுக்கென்ன வேலி மற்றும் செந்தூரப்பூவே சீரியலில் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. காற்றுக்கென்ன வேலி சீரியல் 6 மணிக்கும் செந்தூர பூவே சீரியல் 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here