யுவன் சங்கர் ராஜா இசையில் பிரபு தேவா நடன அமைப்பில் மாரி 2 படத்தில் தனுஷ் எழுதி பாடிய ரவுடி பேபி பாடல் யூடியூபில் 5 மில்லியன் லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. தென்னிந்தியாவில் 5 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் பாடல் இதுவாகும்.
மாரி 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் திரைக்கு வந்த படம் மாரி 2. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் எழுதி, பாடி சாய் பல்லவியுடன் இணைந்து ஆடி பட்டையை கிளப்பிய பாடல் தான் “ரவுடி பேபி”. இப்பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. அதும் பிரபு தேவாவின் கடினமான நடன அமைப்புகளையும் தனுஷும் சாய் பல்லவியும் அசால்ட்டாக ஆடியது பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.
யூடியூப்பில் வெளிவந்த நாள் முதலே இந்த பாடல் நிகழ்த்தாத சாதனை இல்லை. தென்னிந்திய பாடல்களில் 1 பில்லியன் பேரால் கண்டு ரசிக்கப்பட்டது என்ற சாதனையும் ரவுடி பேபி படைத்தது. தற்போது மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது இந்த பாடல் தற்போது யூடியூப்பில் 5 மில்லியன் லைக்குகளை கடந்துள்ளது. தென்னிந்திய சினிமா பாடல்களில் 5 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் பாடல் இது என்ற பெருமையை இதன் மூலம் ரவுடி பேபி பெற்றுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்