எழில் இனிமே எங்க வீட்டுக்கு வராத.,,கோபத்தை காட்டிய அமிர்தா அப்பா.,, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!

0
எழில் இனிமே எங்க வீட்டுக்கு வராத.,,கோபத்தை காட்டிய அமிர்தா அப்பா.,, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!
எழில் இனிமே எங்க வீட்டுக்கு வராத.,,கோபத்தை காட்டிய அமிர்தா அப்பா.,, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்!!

பாக்கியலட்சுமி சீரியலில், விறுவிறுப்பை அதிகப்படுத்தும் விதமாக எழில்-அமிர்தா கல்யாணம் நோக்கி சீரியல் நகர்கிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியல்:

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஸ்கூல் விட்டு வந்த இனியா ரொம்ப டல்லாக இருக்கிறார். இதை பார்த்த பாக்கியா, ஈஸ்வரி என்னாச்சு என்று கேட்க HM நாளைக்கு பேரன்ட்சை ஸ்கூலுக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க என்று சொல்கிறார். இதையடுத்து எதுக்கு கூட்டிட்டு வர சொன்னாங்க, காரணம் என்ன என்று குடும்பத்தினர் இனியாவிடம் கேட்க ஒன்றும் இல்லை என சமாளித்து விட்டு போய்விட்டார். மறுபுறம் எழில் அமிர்தா வீட்டுக்கு போக அமிர்தா எழிலிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை, மேலும் அவரின் அம்மா அப்பாவும் தயங்கி தயங்கி பேசினார்கள்.

என்னாச்சு ஏன் யாரும் பேசமாட்டிக்கிறீங்க? என்று கேட்க, அமிர்தா அப்பா, அம்மா உங்க வீட்ல நீ அமிர்தாவை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லிட்டியா? என்று கேட்கின்றனர். அதற்கு எழில், அம்மாவிடம் சொல்லி விட்டேன், ஆனால் இப்போ குடும்பத்தினர் எல்லாரிடம் சொல்ல முடியாது நிலைமை சரியில்லை, கொஞ்ச நாள் போகட்டும் நான் சொல்லிடுறேன் என்று சொல்கிறார். அதற்கு அமிர்தா அப்பா, அப்போ அதுவரைக்கும் எங்க வீட்டுக்கு வராத? என்று சொல்லிவிட்டார். இதை கேட்டு எழில் அதிர்ச்சி ஆகிவிட்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இன்னொரு பக்கம் செழியன், ஜெனிக்கு ஆப்பிள் கட் பண்ணி கொடுக்க, இது பழங்கள் எல்லாம் அப்பா வாங்கி கொடுத்தது என்று ஜெனியிடம் சொல்கிறார். இதைக்கேட்டு சாப்பிட்ட ஆப்பிளை கீழே துப்பி விட்டார் ஜெனி, இதையடுத்து குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து இது கோபி அங்கிள் வாங்கி கொடுத்ததாம் என்று சொல்ல, உச்சகட்ட கோபத்திற்கு ஈஸ்வரி சென்றுவிட்டார். அந்த பழங்களை எல்லாம் எடுத்து குப்பையில் போட்டுவிட்டு, செழியனை பயங்கரமாக ஈஸ்வரி திட்டுகிறார். இதையடுத்து இனியா எழிலிடம் ஸ்கூலுக்கு நாளைக்கு வரியா? என்று கேட்க அவர் வர மறுத்துவிட்டார்.

அடுத்து தாத்தாவிடம் கேட்க அவர் ஓகே சொல்கிறார். இதையடுத்து பாக்கியாவிடம் சென்று ஸ்கூல்ல போன் யூஸ் பண்ணா தப்பா? என கேட்க தப்புதான் என்று சொல்கிறார். எதுக்கு கேட்ட? என்று பாக்கியா கேட்க சும்மா கேட்டேன் என்று சொல்லி சமாளித்து விட்டார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here