முன்னணி நடிகர்களையே பின்னுக்கு தள்ளிய விஜய் சேதுபதி – வெளியான சம்பள பணம் விவரம்!!

0

மாஸ்டர் படத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டில் வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். தமிழ் பட உலகின் முன்னணி ஹீரோக்களை முந்தும் அளவிற்கு அவருக்கு சம்பள தொகை கிடைத்துள்ளதாக தகவல்கள் பரவிவருகிறது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி, 2006 ம் ஆண்டு வெளிவந்த நடிகர் தனுஷின் ‘புதுப்பேட்டை’ என்ற படத்தில் ஒரு குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்த விஜய் சேதுபதி தனது கடின உழைப்பாலும் சினிமா மீதான ஈடுபாட்டாலும் தமிழில் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார். கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி ரசித்து நடித்து வரும் ஒரு நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்து அதிக வெற்றி படங்களையும் கொடுத்தவர் நடிகர் விஜய் சேதுபதி.

புகழ், ஷிவாங்கி, அஸ்வின் இணையும் சூப்பர் காம்போ – மரண மாஸாக வெளியான குக் வித் கோமாளி ப்ரோமோ!!

அனைவராலும் ”மக்கள் செல்வன்” என்று பெருமையுடன் அழைக்கப்படும் விஜய் சேதுபதி பாலிவுட்டில் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் பாலிவுட் வெப் தொடரில் அவருக்கான சம்பள விவரம் தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. அமேசான் ப்ரைம் தயாரித்து வரும் இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இயக்குகின்றனர். இந்த தொடரில் விஜய் சேதுபதியுடன் நடிகர் ஷாகித் கபூர் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இத்தொடரில் நாயகனாக நடித்து வரும் ஷாகித் கபூருக்கு சம்பளம் 40 கோடி என்றும், அவருடன் நடித்துவரும் விஜய் சேதுபதிக்கு சம்பளம் 55 கோடி என்றும் இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவல் திரைத்துறையினர் பலரை ஆச்சரியத்துக்குள்ளாகியிருக்கிறது. தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள படத்திற்கு அவருக்கு 10 முதல் 15 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது. தற்போது வெப் தொடருக்கு இவர் வாங்கும் சம்பளம் நடிகர் விஜய் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை விட அதிகம் என்ற செய்தி சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here