வெளிநாட்டு பயணிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு தடை – குவைத் அரசாங்கம் அறிவிப்பு!!

0

அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு 2 வார கால தடை உத்தரவை அறிவித்துள்ளது குவைத் அரசாங்கம். அந்நாட்டுக்கு வரும் மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு தடை

கடந்த 2019 ம் ஆண்டு சீனாவிலுள்ள வுஹான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதிவேகமாக உலகமெங்கிலும் எதிர்பாரத விதமாக பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்றும் கூட குறையவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ம் தேதி குவைத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தொற்றின் வேகம் அதிகரித்து வருவதை கண்ட குவைத் அரசாங்கம் மே மாதம் வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தது. குவைத்தில் கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167,410 ஆகும்.

ட்விட்டரில் எல்லை மீறிய கங்கனா ரனாவத் – டிவீட்கள் நீக்கம்!!

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் குவைத் நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் குவைத் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் பிப்ரவரி 7 முதல் இரண்டு வார காலத்துக்கு வெளிநாட்டு பயணிகள் குவைத் வருவதை தடை செய்துள்ளது. அந்நாட்டிலிருக்கும் மக்களின் உறவினர்கள் மற்றும் அந்நாட்டில் பணிபுரியும் பணியாளர்கள் தவிர மற்ற அனைத்து வெளிநாட்டவர்களும் குவைத் உள்ளே வர தடைசெய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் குவைத்துக்கு வரும் மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here