புகழ், ஷிவாங்கி, அஸ்வின் இணையும் சூப்பர் காம்போ – மரண மாஸாக வெளியான குக் வித் கோமாளி ப்ரோமோ!!

0

மக்கள் மத்தியில் எப்பொழுதுமே சமையல் நிகழ்ச்சிக்கு என்று தனி மவுசு இருக்கும். இந்த சமையல் நிகழ்ச்சியுடன் காமெடியும் கலந்து இருந்தால் சொல்லவே வேண்டாம். அப்படி பட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. தற்போது அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாராவாரம் பல கலகலப்பான டாஸ்க்குகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. எப்பொழுது சனி ஞாயிறு வரும் என்று பலரும் காத்துக்கொண்டும் உள்ளனர். புகழ், ஷிவாங்கி, பாலா, மணிமேகலை காமெடி வேற லெவெலில் வெளியாகி வருகிறது.

போன சீசனை விட இந்த சீசன் கலைக்கட்டியுள்ளது. அஸ்வின்-ஷிவாங்கி காம்போகாக தான் பலரும் ஆவலுடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். மேலும் அஸ்வினுக்கு தற்போது இன்ஸ்டா பக்கத்தில் 1 மில்லியன் வியூவர்ஸ் பெற்றிருந்தார்.

விஜய் டிவியில் மீண்டும் இணையும் சின்னத்திரை ஜோடி – ரசிகர்கள் உற்சாகம்!!

இதற்கு குக் வித் கோமாளி செட்டிலேயே கேக் கட் செய்து கொண்டாடினர். தற்போது விஜய் டிவி குக் வித் கோமாளியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. முதல் ப்ரோமோவில் மிக்ச்சர் டாஸ்கை கொடுத்துள்ளனர். அதிலேயே பல கலாட்டாக்கள் செய்துள்ளனர் கோமாளிகள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தடவை அஸ்வினுடன் புகழ் இணைந்துள்ளார். புகழ் கிரிக்கெட் ஸ்டைலில் சமையல் செய்ய அஸ்வினே வயறு குலுங்க சிரிக்க ஆரம்பித்து விடுகிறார். அஸ்வினுக்கு புகழ் தான் குக்கிங் பார்ட்னராக வந்த உடன் மச்சான் என்று கத்துகிறார். புகழும் ஓடி வந்து அஸ்வின் மீது ஏறிக்கொள்ள ஷிவாங்கி,புகழ், அஸ்வின் மூன்று பெரும் குத்து டான்ஸ் ஆடுகின்றனர்.

இந்த ப்ரோமோ வழக்கத்திற்கு மாறாக பலரையும் ரசிக்க வைத்துள்ளது. எப்பொழுதும் புகழ் தான் அஸ்வினை மாப்பிளை என்று சொல்லி கேட்டிருக்கிறோம். இப்பொழுது அஸ்வின் வாயிலிருந்து மச்சம் என்ற அழைப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here