விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் – கிரேட்டா தன்பெர்க் மீது வழக்குப்பதிவு!!

0

தற்போது டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டவர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை முன்னிட்டு 18 வயதான சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தனது கருத்தை தெரிவித்தார். தற்போது இவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிரேட்டா தன்பெர்க்:

டெல்லியில் கடந்த 2 மாத காலமாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும் போராட்டத்தை நிறுத்துவதற்காக அரசுக்கும் விவசாயிகளுக்கும் 12 முறை பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் அவை அனைத்தும் பலனில்லாமல் போனது. மேலும் கடந்த குடியரசு தின விழாவில் பெரிய கலவரமே நடந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது டெல்லியில் போராட்டத்தின் வீரியத்தை குறைக்கும் வகையில் இணைய சேவையை தடை செய்துள்ளனர். தற்போது இதனை சுட்டிக்காட்டி வெளிநாட்டவர்கள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அமெரிக்க பாப் பாடகி ரிஹானா தெரிவித்த கருத்துக்கு இந்தியா பிரபலங்கள் அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த வரிசையில் சுவீடன் நாட்டை சேர்ந்த சுற்று சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஓர் கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பாடகி ரிஹானா பாகிஸ்தானியா?? இஸ்லாமியரா?? கூகுளில் தேடிவரும் இந்தியர்கள்!!

அவருக்கு வெறும் 18 வயதே ஆகியுள்ளது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ‘போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு நாம் ஆதரவாக நிற்போம்’ என்று ட்வீட் செய்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இவர் செய்த டீவீட்டினால் டெல்லி போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here